Monday, 9 October 2017

என் மாமன் மகள்



வெளி அழகு பாராத 
உள் அன்பு கொண்டவளே! 
கடை கண் பார்வையில் 
காதலை அள்ளித் தெளிப்பவளே! 
அழகிகள் தன் அழகில் 
அய்யம் கொள்ளும் பேரழகியே! 
பதுமைகள் பல சேர்ந்த 
புதுமையானவளே!!! 
சிந்துகின்ற பவளங்களின் 
இசைக்கூட தோற்கும் 
அவள் சிரிப்பிற்கு..... 
நெற்றியில் வழிந்தோடும் இழைச் சுருள் 
தேன் அருவி பாயும் நீர் ஊற்றாய் மின்ன... 
உன் மழலை நேசத்தை கடன் வாங்கி 
தூவுதோ வானம் இப்பூவுலகில் மழையை! 
அணைத்து பூவின் மென்மை 
அவள் உதிர்க்கும் வார்த்தை 
அதில் மயங்காத ஞானியும் உண்டோ?? 

என் துயர் விலக்கியவளே! 
வெறுமையை நீக்கிய பெருமையே! 
நான் வீழ்கின்ற வரை 
நீ மட்டும் என் உயிர் தோழியாக 
கிடைப்பாயா? என் மாமன் மகளே!!! 
உன்னுடன் கோர்த்த கைகளில் 
நெடுதூரம் பயணிக்க வேண்டும்...... 
காணாத அதிசயங்கள் காண வேண்டும் 
யுகங்கள் பல கடந்தாலும் - உன் 
யுகம் மட்டும் ஆம்பல் பூவாய் 
என்னுள் உன் வாசம் பரப்பி...... 
மறுப் பிறவியும் நீயே வேண்டும் 
என் கை கோர்க்க தோழியாய்! 
சிநேகங்களுடன்....... 

-மூ.முத்துச்செல்வி



1 comment:

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...