Monday, 9 October 2017

எல்லாம் இன்றி போனோம்

மரம் இன்றி போனோம்!!!!! 
மழை இன்றி போனோம்!!!!! 
மண் இன்றி போனோம்!!!!! 
தண்ணீர் தரும் சுகம் இன்றி போனோம்!!!!! 
தரணியில் வாழ வழி இன்றி போனோம்!!!!! 

குடிசை இன்றி போனோம்!!!!! 
குடிக்க நீர் இன்றி போனோம்!!!!! 
உரிமை இன்றி போனோம்!!!!!- இம்மணுலகில் 
உடமையும் இன்றி போனோம்!!!!! 

நிஜம் இன்றி போனோம்!!!!! 
நிழல் இன்றி போனோம்!!!!! 
ஒளி இன்றி போனோம்!!!!! 
ஒளி தரும் இதம் இன்றி போனோம்!!!!! 

எண்ணங்கள் இன்றி போனோம்!!!!! 
அது தரும் சிந்தனை இன்றி போனோம்!!!!! 
எல்லாம் இன்றி போனோம்!!!!! 
உயிர் மட்டும் உள்ள பிணமாய்!.... 

வானுயர் கட்டிடங்கள் தான் 
வாழ்க்கை என்று இன்று 
வாழ்விழந்து தெருவில்........... 

இது போதாது என்று 
இன்னும் திருட துடிக்கிறது 
என் இனிய தேசம் 
அதன் தலைவர்கள் வழியில்.......... 

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...