மணமுடித்தேன் தோழி
உன் கரம் பற்றி தந்த
கைகளை - என் துணைவி
நீ தேடி தந்த பரிசு........
வள்ளுவனும் வாசகியும்
நானும் அவளும்
வள்ளுவனுக்கு பெருமை சேர்த்த
எழுத்தாணியாய் நீ
என் வாழ்வில்..........
ஓளவை இருந்திருந்தால்
வியந்து தான் போயிருப்பாள்
நம் நட்பின் பகிர்வை பார்த்து
நமகென்று வடித்திருப்பாள்
ஓர் ஆத்திசூடியும்............
கொற்கை புலவரும்
பாட்டிசைப்பார்
துன்பத்தின் முன்னும்
இன்பத்தின் பின்னும்
நீ இருப்பதை கண்டு............
என் அன்னையின் மருவுருவமாய்
அன்பை பொழிந்து
என் அய்யனின் பிம்பமாய்
தவறுகளில் வழி நடத்தினாய் நீ
மரணம் தழுவும் வரை
உன் பிம்பம் என் நினைவுகளில்
என் அன்பு தோழியே!!!
-மூ.முத்துச்செல்வி
No comments:
Post a Comment