Monday, 9 October 2017

காதல் போக்கு

உன் அழகை சொல்ல 
ஆயிரம் ஆயிரம் 
வார்த்தை சேகரித்தேன்......... 
ஒன்றும் எழவில்லை 
உன் கண்களை 
பார்த்தபின்............. 

நீ என் அருகில் வர வர 
எனக்கு தெரிந்தவையும் 
என்னை விட்டு தூரம் சென்றனவே!!!!!!........ 

உன் சுருண்ட கூந்தலில் 
சிக்கிய பின்னலாய் 
சிக்கித்தான் போனது 
என் ஆழ் மனம்........ 

நீ தலை ஆட்டி பேசும் போது 
உன் காதில் மாட்டிய ஓவிய காதணி 
அதனுடன் ஆடும் என் மனம்........ 

தண்ணீரில் சிக்கி 
தவிக்கும் சின்னசிறு புறாவாய் 
என் கண்கள் உன்னை மட்டும் 
சுற்றி சிக்கி தவிகின்றதே........ 

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...