Monday, 9 October 2017

உன் நினைவுகளில்

தாமரை இலை 
நீர்க்குமிழ் நான் 
ஒட்டவும் முடியாமல் 
விலகவும் முடியாமல் 
தள்ளாடி தவிக்கிறேன் 
இருதலை காதல் 
ஒருதலையாய் போனதால்......... 

துள்ளிசை கேட்ட செவிகள் 
சோகத்தின் மடியில் 
தலை சாய்த்து 
உன் பிரிவினை எண்ணி 
முகம் புதைத்து கிடக்கின்றன 
கண்ணீர் கடலில்............ 

ஒற்றை சிற்பமாய் 
துணை தேடி நின்றிருக்கலாம் 
ஒரு தலை ராகமாய்......... 
ஆனால் 
உடைந்த சிற்பங்களாய் 
காக்கைகளின் நடுவில் 
நொறுங்கி போய் கிடக்கும் 
மனம் உன் பிரிவை எண்ணி 
துணை சேர வருவாயா 
ஏங்கும் மனம்....... 

சோகமும் இல்லாமல் 
சுகமும் இல்லாமல் 
நரகமும் இல்லாமல் 
சொர்கமும் இல்லாமல் 
எதுவும் இல்லாமல் 
உன்னை மட்டும் தேடும் மனம்......... 

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...