Monday, 9 October 2017

பிரிவோம் சந்திப்போம்

அகன் பார்த்து வளர்ந்திட காதல் 
வருடும் தென்றலில் ஒளிந்திட்ட மழைத்துளி போல் 
உன் அக அன்பில் ஒளிந்திட்ட என் காதல் 
தூரத்து வான் ஒளியில் கொஞ்சிடும் இரு பறவைகள் போல் 
உன் நினைவுகளும் நானும் நிலவொளியில்.... 
பார்க்கின்ற பூக்களில் எல்லாம் உன் முகமொட்டுகள் தான் 
விரியும் நேரம் வரை காத்திருக்கிறேன் உன் முழுமுகம் காண 
சுடும் சூரியனும் நகைக்கிறது அதன் 
தணலிலும் உன்னை நினைப்பதால் - நாணி செல்கிறேன் 
உன் நாணத்தில் விழ்ந்த நம் காதலில்...... 
மழையில் குடை இருந்தும் மனமில்லை 
மழை அழகில் நடக்க - கூட நீ இல்லாததால்..... 
நிச்சயம் தந்த நம் உறவில் வார்த்தைகளில் 
பிரிந்தோம் ஆனாலும் மீண்டும் சந்திப்போம் 
நம் காதல் தந்த நம்பிக்கையில்...... 

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...