Thursday, 5 October 2017

நம் காதலை சொல்லிட












உன் நிழல் பாதங்கள் 
தரையில் விழும்முன் 
தாங்கிட துடிக்கும் கைகள் - எண்ணமாய் 
நம் காதலை சொல்லிட...... 

உன் விருப்ப வண்ணங்களில் 
ரங்கோலிகளாய் மாறிய 
என் அறை சுவர்கள் - வண்ணமாய் 
நம் காதலை சொல்லிட....... 

உன் வியர்வை துளி மொட்டுக்கள் 
சிந்தும் பனியில் உதிக்கிறது 
என் காலை வெளிச்சம் - ஆனந்தமாய் 
நம் காதலை சொல்லிட....... 

உன் முக தரிசனம் காண 
விடியலும் ஒளி கூப்பி தேடுகிறது 
உன் வாசல் படிகளில் - பிம்பமாய் 
நம் காதலை சொல்லிட....... 

உன் பருக்களில் முத்தமிட 
கூம்பிய இதழும் விரியும் முட்களை 
மறைத்து உன்னை வறுட - மென்மையாய் 
நம் காதலை சொல்லிட....... 

கற்பனை வர்ணிப்புகள் சிந்திய 
நிரல்பலகை கவிதை வரிகளில் 
வளர்கிற காதல் - மெய்யாய் 
நம் காதலை சொல்லிட....... 

- மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...