Monday, 9 October 2017

காதலில் விழுந்தேனோ???

உன் பார்வை வரிகள் 
சிந்திய துளிகளால் 
கருகிய என் மன தோட்டம் 
பச்சை கொடிகளாய் - உன் 
விழி பூக்களை சுமந்தபடி........... 
பார்பவையும் அழகாய் - என் 
கண்களில் வண்ண கோலங்கள்........ 

உன் அருகினில் வர வர 
பூக்களின் மணம் 
சுற்றியும் பார்த்தேன் - காணவில்லை 
பூக்களை மட்டும் - வண்ண 
பூக்களின் மணம் 
என்னை மட்டும் வட்டமிட்டு 

கையில் உள்ள பூவும் 
மணம் வீச மறந்தது - உன் 
முக பாவனைக்கு 
என்னை மறந்து 
தன்னை மறந்து 
பூமியும் சுற்றுகிறது உன்னை....... 

உன் உதடுகளில் 
உதிர்ந்த என் பெயரும் 
மந்திரமாய் - என் 
செவிகளில் மறுபடி மறுபடி 
ஒலித்து...... 

உன்னை மட்டும் சுற்றும் மனம் 
கவிதை வரிகளை தந்து 
புரியவில்லை 
தெரியவில்லை 
என் மன ஓட்டம் 
ஒருவேளை இப்படி புலம்புவதுதான் 
காதலோ!!!!!! 

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...