Wednesday 17 April 2024

என் மகளே!

உலகமே வியந்து பார்க்கும் 
உன் கண்ணகுழி சிரிப்பில்...
ஆழ்கடலில் தேடியும் 
ஆராய முடியா பவளம் நீ!!!
ஆர்ப்பரிக்கும் அழுகுரல்
ஆரவாரம் செய்யும் சேட்டைகள்
அதையும் ரசிக்கும் நான்...
உன்னுடனே வளர்கிறேன் 
உன்னுள்ளே கறைகிறேன் 
என் அன்பு மகளே!

- முத்து துரை 

Saturday 16 December 2023

இரு சக்கரம்

உன் இரு சுழலில் 

உள்ளம் மகிழ்ந்தேன்

உவகை தேடி அலைந்தேன்

உன்னை வர்ணிக்க...

உன்னை காணும் ஆர்வம்

உன்னை தொட்டு தழுவிய நிமிடம்

என் பயணம் உன்னுடன் 

என் இரு சக்கரமே!..


- முத்து துரை 


Saturday 9 December 2023

எல்லாம் நீயே!

நானே பேசிக் கொள்கிறேனாம்
அவர்களுக்கு புரியவில்லை - நான்
உன்னோடு பேசிக் கொண்டு இருக்கிறேன் என்று...

பைத்தியமா என்கிறார்கள்
ஆம் 
நான் உன் மீது பைத்தியம் தான்...

ஏதோ பிதற்றுகிறேன் என்கிறார்கள்
உனக்கு மட்டும் எப்படி புரிகிறது நான் சொல்வது என்னவென்று...

தனிதிருகிறேன் என்கிறார்கள்
அவர்களுக்கு தெரியவில்லை - நீ
என்னோடு இருப்பது....

எல்லாம் நீயே என்று போனேன் 
எல்லாம் நீயே என்னுள் ..

- முத்து துரை 







Saturday 28 October 2023

போர் போர்

ஏன் இந்த நிலை ?
பார்ப்பதற்கே பதைக்கிறதே
ஐயோ இறைவா !
எப்படி தாங்குகிறது 
எண்ணற்ற இதயங்கள் 
வானில் இருந்து விழுவது 
வானம் தரும் கொடையா!
இல்லை 
மனிதம் தரும் வலியா!
என்னவென்று தெரியாமல் விடியல்கள் 
எத்துணை எத்துணை 
பச்சிளம் இதயங்கள் 
உங்கள் பகைக்கு 
பிஞ்சிகள் என்ன செய்ததோ!
போர் போர் என்று 
போகும் மனமே !
உங்கள் போதைக்கு 
பலிகள் ஏனோ 
பாவப்பட்ட மனிதங்களே!

-முத்து துரை 

Sunday 15 October 2023

நிஜமா! நிழலா!


நிழலாடும் போது

நிஜம் தேடுகின்றேன்...

நிஜம் தேடும் போது

நிழல் எங்கு என்றேன்...

நிஜமே நிழலாகும் போது

நான் எதை தேடுவேன்?


நிழல் என்றும் 

நிஜம் என்றும் 

நிஜம் கலந்த நிழல் என்றும்

நிழல் கலந்த நிஜம் என்றும் 

பாகுபாடு தெரியவில்லை...


பாகுபாடு தெரிந்தும் கூட 

நிழல் எங்கே தேடுது 

நிஜம் தோற்ற போது

நிழல் காரணம் என்றால்

எதை கொண்டு வீழ்ந்தேன்

நிஜம் புரியவில்லை...

நிஜம் காட்டும் முகங்கள் 

நிழல் போல ஆக

நிஜம் எங்கு தேடுவாய்

மனம் நீயே சொல்லு!...

மனம் நீயே சொல்லு!...


- முத்து துரை 




Wednesday 27 September 2023

மகளுடன் என் பயணம்...

நீ தூங்கும் அழகை 
ரசித்த விழிகள்
எப்போ தூங்குவாய் ஏங்குகிறது...

ஐய்யோ!
காதல் தோல்வியே மேல்
உன்னை தூங்க வைப்பதை விட
எண்ணுகிறது என் எண்ணம்...

  
ஏதெதோ கதைகள் பேசி பேசி ஓய்கிறது
உன்னை கொஞ்சி கொஞ்சி 
களித்த இதழ்கள் தூங்கடி என்று ...

நேரம் செல்கிறது
அய்யோ! 
இரவின் கொடுமை விரிகிறது
உனக்கு தூக்கம் மட்டும் வரவில்லையே...

எப்போது பிஞ்சி கைகள் மலரும்
எப்போது உன் கால்கள் நடைபோடும்
எப்போது உன் கண்கள் துயில் கொள்ளும் 
எப்போது எப்போது என்று புலம்பும் மனம்...

தாய்மை தூய்மைதான் 
நான் தாலாட்டு பாடியதும் 
நீ தூங்கியதும்...
கதை சொல்லியதும் 
தூங்கினாள் பிறர் சொல்ல
நமக்கு மட்டும் தான் இப்படியா
இன்னும் கதச் சொல்லுங்க 
இன்னும் கதச் சொல்லுங்க 
இனிய குரல் மட்டும்...

எல்லா நேரமும் அவளின் பாடல்கள் தான் 
நினைவில் வருவதெல்லாம் 
உருளைக்கிழங்கு செல்லகுட்டி
என்று வளர்வாளோ
என் செல்ல மகள்...

- முத்து துரை 





Wednesday 20 September 2023

கத கதையாம்!!!

கத கதையா

கத கதையா

காரணமாம்...

காரணத்த நான் சொல்லவா!

பிடிக்கலனு சொல்றதுக்கு 

பல காரணம்...

பிடிக்கிதுனு சொல்றதுக்கு 

ஒரு காரணமாம்....

கத கதையா

காரணங்கள் அடுகுத்தமா

காரியங்களோடு...

காரியங்களை அறியாமல் 

காரணங்களை நம்புதம்மா...

யார் மீதும் யார் மீதும் 

நம்பிக்கை இல்லையம்மா...

வேண்டாம் வேண்டாம் 

இந்த உறவுகளம்மா 


- முத்து துரை 


 


என் மகளே!

உலகமே வியந்து பார்க்கும்  உன் கண்ணகுழி சிரிப்பில்... ஆழ்கடலில் தேடியும்  ஆராய முடியா பவளம் நீ!!! ஆர்ப்பரிக்கும் அழுகுரல் ஆரவாரம் செய்யும் சே...