Monday, 9 October 2017

பெண்



கண்ணதாசன் மது கிண்ணத்தில் 
வழிந்திட்ட போதை வரிகள் 
அவள் கரு விழி கண்கள்.......... 

வாலி வரைந்திட வரிகளின் 
முகபொழிவு வெயிலில் 
மின்னும் அவளின் முகம்........... 

வைரமுத்து வடித்திட்ட 
வரிகளில் - அவரின் 
ஒரு வரி இருமுறை உச்சரிப்பு ஈர்ப்பு 
அவளின் முனுமுனு பேச்சி......... 

அப்துல் ரகுமான் செதுக்கிய 
பால்வீதி 
விரிந்தோடும் -அவள் 
கூந்தல்........ 

ஜெயகாந்தன், ஜெயமோகன் 
கதை தொகுப்பில் வரும் 
சினுங்கல் -அவள் 
காலின் கொலுசு.......... 

கல்கி செதுக்கிய வரிகள் 
ஈர்க்கும் கவனம் 
அவளின் கை மொழி அசைவு....... 

பாரதி தாங்கிய 
வீர வரியில் உள்ள 
புதுமை பெண்ணும் 
இவள்தானோ!!! -தாயாய் 
அவளின் தைரியம்....... 

-மூ.முத்துச்செல்வி


No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...