Monday, 9 October 2017

நானும் அவனே

தலையணை உறை 
தாலாட்டில் கண்டேன் 
தாய்மடி ஆனந்தம்!!! 
தட்டு தாளமிட -வரிசையில் 
உண்ட உணவுகள் 
பல சோகமும் மறந்தன 
பிம்பங்களின் ஆறுதலில் 
நிழலுடன் கைவீசிய 
நீண்ட பயணங்கள் 
தவறும், சரியும் வகுத்திட்ட 
முக கண்ணாடி 
பார்க்கின்ற பெண்மையெல்லாம் 
இவள் என் அன்னையாய் 
இருந்திருக்க கூடாதா 
ஏங்கும் நெஞ்சம் 
யார் செய்த தவறோ 
நானும் அனாதை 
யாருக்கும் யாருமில்லா தேசத்தில் 
நானும் அனாதை இல்லை 
ஆறுதல் அடையும் மனம் 
பணங்களுக்கு நடுவில் ஒளிந்திட்ட 
முகங்களில் என் பாச தாயை 
எங்கே தேடுவேன் - என் 
கற்பனை கடவுளே......... 

-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...