மலை அழகில் வளர்ந்திட காதல்
மழை பொய்த்தாலும் மாறா காதல்
மழை நேரம் உன் உடல் அழகை கண்டு
மனம் மறந்த காதல் - என்னவளே
உன் முகம் சுருங்க நான் வாடிய நேரம்
உன் வருடும் தென்றலில் எனை பூக்க செய்த காதல்
மொழிகள் தேவையில்லா காதலில்
நீயும், நானும் பயணிக்கும் காதல்
பசுமையில் மலர்ந்திட்ட காதல்
பருவங்கள் மாறியும் மாறா காதல்
காதலில் கரைந்து நாம் சென்ற பயணம்தான்
என் வாழ்வின் வரலாறு
உன் நோயுற்ற மேனியை நோக்க
எனக்கு திராணியில்லை
உன்னை வாழ வைக்க
எனையும் மாய்த்து கொள்கிற காதல்
நாம் இணைத்திடுவோம் என்ற நம்பிக்கையில்......
விவசாயியான என் காதலை புரிவாய்
என் காதலி பூமியே!!!!
-மூ.முத்துச்செல்வி
No comments:
Post a Comment