Monday, 9 October 2017

எங்கே மனிதம்

சமத்துவத்தில் உதிர்ந்த மனிதம் 
தொடர்பு படுத்தும் மொழியால் 
தொடர்பற்று நிர்கதியாய் வீதியில்.... 
கொண்ட வரலாற்றில் வேறுபட்டு..... 

கல்வி விற்பனையால் 
வேசியாய் போனது பகுத்தறிவு 
சாதிகளின் பிடியில் 
அரசியல் நாடகம் விரித்து.... 

பகுந்துண்டு வாழ்ந்த 
பரம்பரை பிச்சை கேட்கிறது 
இருப்பவைகளை பாதுகாக்க தவறி... 
தானம் பல செய்து 
தன் சுகம் மறந்த தேசம்..... 

தண்ணீர் கண்ணீராய் - போன 
விவசாயி துயர் துடைக்க 
மறந்த தேசம்..... 
கூத்தாடியின் கூத்தாட்டம் அறியாமல் 
அவன் குரலுக்கு கொக்கரிக்கிறது.... 

பகர்ந்திட மறுக்கும் பூமி 
அத்தணையும் தன் எல்லைக்குள் 
அடக்க துடிக்கிறது..... 

வேற்றுமையில் ஒற்றுமை கண்ட 
தேசம் எங்கே!!!! 
மனிதம் வளர்த்திட்ட 
மனிதம் எங்கே!!!! 
நல் போதனை சொன்ன 
அரசியல் எங்கே!!!!! 

போதும் மனிதா 
போட்டியிடும் போக்கு.... 
மனிதம் விதைத்திட 
மனிதனாய் மீண்டு வா....... 
நல் உலகம் படைக்க.... 
வரும் தலை முறை செழிக்க..... 


-மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...