தவமிருந்து பெற்றேன்
உன்னை மகனே
பல வாய் கேலிக்கு பிறகு
உன்னை கண்டெடுத்தேன்
இன்னல்கள் பல கடந்து
எனக்கு கிடைத்திட்ட
வரம் நீ மகனே!!!!!
என் சிறு இன்னல்
பாகற்காய் போல் மாறியதோ
என் செல்ல மகனே!!!!!
பேர் சொல்ல வைப்பாய்
ஆசைப்பட்டேன்
ஆனால்
அனாதையாய் போக
முதியோர் இல்ல வாசலில்
என் பெயர் சொல்லுவாய் - என்று
தெரியாமல் போனது
என் அன்பு மகனே!!!!!
என் கையொப்பம் அழகோ
சோதிக்கிறாயோ ???
முதியவர் இல்ல பதிவில்
கையொப்பம் இட சொல்லி.......
முதுமை வாசலில் இருப்பது
என் தவறல்ல - மகனே
ஓடாய் போனதெல்லாம்
உனக்காகத்தான்
நியாபகம் வரவில்லையோ!!!!!!!
என் முக சுருக்கம்
உன் வீட்டின் அழகை
பழாக்குகிறதோ!!!
இதற்கு நான் என் செய்வேன் மகனே!!!!!
நீ தவறி விழுகையில்
என் பெயர்தான்
முன்னிற்கும் மறவாதே
என் ஆசை மகனே!!!!
என் கடைசி ஆசை
உன் மடி தலை சாய்த்து
துயில் கொள்ள வேண்டும்
உன் தலை கோத வேண்டும்
என் ஆசைக்கு செவி சாய்பாயோ
என் அருமை மகனே!!!!!
இருளுக்குள் போகும் முன்
சிறிதேனும் வெளிச்சம்
தருவாயோ மகனே!!!!
-மூ.முத்துச்செல்வி
No comments:
Post a Comment