Monday, 23 November 2020
ஓய்வு தேவை!
Thursday, 22 October 2020
ஏக்கம்
எதிர்பார்க்கவில்லை யாரிடமும்
ஆனால்
ஏமாற்றம் மட்டும் தினம் தினம்...
புண்படுத்தவில்லை யாரையும்
ஆனால்
புன்முறுவலுக்கு பின் புண்படுகிறேன்...
பாசம் கேட்கிறேன்
ஆனால்
பாவனை மட்டும் எதிர்புறம்...
காரணம் இல்லாமல்
காதல் கொள்கிறேன்
ஆனால்
காரணம் மட்டும் காதலாகி...
நேரம் இல்லா உலகில்
என்னுடன் மட்டும் - பேச
யாருக்கும் நேரம் இல்லை...
- முத்துச்செல்வி
Tuesday, 4 August 2020
தாலாட்டு பாடல்
கண்ணான கண்ணே!
கண்ணான கண்ணே!
நீ கொஞ்சம் தூங்கடி
பொன்னான நெஞ்சே
புண்ணான நெஞ்சை
நீ கொஞ்சம் நீவடி
நான் காத்து நின்றேன்
நீ தூங்கும் நேரம்
நான் பார்த்து நின்றனே!
கனவுகள் பல கொண்டு நீ தூங்கடி!
ஆரா ராரிரோ! ஆரா ராரிரோ!
ஆரா ரரி ரரி ரோ! ரோ! ரோ!
ஆரா ரரி ரரி ரோ!
அன்னை மடியில்
அமைதியாய் நீ உறங்கடி!
தாலாட்டு நான் பாட
அன்பாய் நீ தூங்கடி!
தோழமை வளர
தோளில் நீ தூங்கடி
இதமாய் நான் தான்
உன்னை தட்டி கொடுக்க
தயங்காமல் நீ தூங்கடி!
ஆரா ராரிரோ! ஆரா ராரிரோ!
ஆரா ரரி ரரி ரோ! ரோ! ரோ!
ஆரா ரரி ரரி ரோ!
விண்மீன்கள் எல்லாம்
உனக்காய் மின்ன
நிலவும் உனக்கு இசைகள் பாட
நீ கண் உறங்கடி!
விண்ணோடும் மண்ணோடும்
நீ தான் விளையாடி
விருப்பங்கள் எல்லாம் நிறைவேற்றி
விம்மிடாமல் நீ தூங்கடி!
ஆரா ராரிரோ! ஆரா ராரிரோ!
ஆரா ரரி ரரி ரோ! ரோ! ரோ!
ஆரா ரரி ரரி ரோ!
- முத்து துரை சூர்யா
Friday, 31 July 2020
வெளிச்சம்
இருளின் எதிரி
இரும்பின் கதிர்
கண்ணாடி பதுமை
பளிச்சிடும் புதுமை
இருப்பிடம் அளித்து
பொத்தான் கொண்டு
வேண்டும் நேரம்
மின்னும் மின்மினி
பார்வை பல
பார்த்தவர் பல
வாழ்வு முடிந்ததும்
குப்பைமேடில்...
- முத்து துரை சூர்யா
Friday, 24 July 2020
மனசாட்சி
மௌனத்தில் நான் இருப்பேன்
கவலைகள் உன்னிடம் நான் சொல்ல
காதோரம் நீ பேசுவாய்
மகிழ்ச்சியின் முதல் ரசிகை
நீ தான்
அதில் நான் நிலைத்திருக்க
செய்பவளும் நீ தான்...
தோழி போல் உடன் வருவாய்
உன் வருகை இன்றி
நான் சென்றதில்லை எங்கும்..
பல விடயங்கள் உன்னிடம் மட்டும்
பதில் நமக்குள் மட்டும்
பல விஷயங்கள் நீ அறிவாய்
பாலம் போல் நீ இருந்தாய்...
நீ எந்தன் மனசுக்குள்
மனசாட்சியே!
- முத்து துரை சூர்யா
Thursday, 16 July 2020
நீ போகயிலே
கண்ணே நீ போகயிலே
முந்தானை முன்
மண்டியிட்டதடி மனம்...
பரபரப்பாய் நீ போகயிலே
கொசுவத்தில் மனம் பிண்ணிக்கொண்டதடி...
பக்குவமாய் நீ போகயிலே
பால் நிலா போல்
மனம் பருவம் கொண்டதடி...
தாளம் போட்டு நீ போகயிலே!
தளர்ந்ததடி மனம்...
உன்னை கருவில் சுமக்க அன்று வெறுத்தால்..
உன் தாயான ஒரு பெண்...
இன்றும் சில நிலத்தில் நீ வெறுக்கத்தான் படுகிறாய்
ஒரு கருத்தமாவை போல....
பெண்ணாய் நீ சாதனை படைத்தாளும்....
உன்னை ஒரு விலைப் பொருளாக பார்க்கிறது..
வரதர்ச்சனை என்ற பேரில்.....
இன்னும் கொடுமையான இந்த உலகில்
இந்த நிலை மாற என்ன செய்யப் போகிறாயாடி....
விலை பொருளான உன்னை மாற்ற....
காதல் மட்டும்தான் சரி என்றால்-இந்த
உலகில் உண்மை காதல் யாரிடமும் இல்லையடி....
அப்படி இருந்தால் ஜாதிகள் இடை நிற்கிறதே!....
தாய்மையான உன்னை தன் தாயை போல
தங்கை போல பார்க்க மறுப்பது ஏனோ....
பெண்ணுக்கு பெண்ணேதான் எதிரியடி....
அவர்களை வெல்ல ஒரு போதும் உன்னால் முடிவதில்லை....
இந்த உலகில் உன் நிலைதான் என்ன பெண்ணே
தெரிந்தால் எனக்கும் சொல்லடி..
இந்த கொடிய உலகை வெல்ல.....
-மூ.முத்துச்செல்வி
Saturday, 11 July 2020
இன்றைய நிலை
நீ இருந்தும்
கட்டி தழுவ முடியவில்லை...
நீ இருந்தும்
தொட முடியவில்லை...
நினைத்தும்
எட்டி நின்று
உரையாடுகிறோம்...
நீ இருந்தும்
முகமுடி தடுக்கிறது...
இப்படி இருக்க
என்று மாறுமோ!
இந்த நிலை றை
Thursday, 9 July 2020
Wednesday, 8 July 2020
இயற்கை
பம்பரம் போல் இருந்தோம்
பாய்மரமாய் கிழிந்தோம்
திசைகள் இல்லை இப்பொழுது...
கூடுகள் இன்றி திரிந்தோம்
ஒரு கூடுகுள் அடைந்தோம்
மரண பயம் தந்தாய்
இயற்கையை புதுபித்தாய்
மதத்தை மறக்க வைத்தாய்
வாழ்வை கற்பிதாய்
வாழும் வேளை
வாழ்வை தர வேண்டும்...
- முத்து துரை சூர்யா
Friday, 12 June 2020
பொறுமையுடன் வளர் என்றது...
பக்குவதுடன் இரு என்றது...
இமை மூடாமல் கவனி என்றது...
பெண்பிள்ளைக்கு வேலை எதற்கு என்றது...
கணவனுக்கு பணிய சொன்னது...
அனைவரையும் புரிந்து நடக்க சொன்னது..
கிழவிக்கு வேலை இல்லை என்றது...
பெண் பேதை
நடிகன் வீரன்
நடிகை போதை
ஆண் விதைத்த விதையை
பெண் நினைத்து சுமக்க
வலிகள் முழுவதும் பெண்ணிற்கு
ஆண்டவா ஏன் இந்த படைப்பு?
ஏன்
பெண்ணை பயிராய் படைத்தாய்
பெண்ணை விழுது தாங்கிய ஆலமரம் என்று கூறினால்
பயிர் போல் எளிதில் பறித்திட தோன்றாது
விழுதுகளை விழ்த்திட முடியாது!...
Thursday, 4 June 2020
உணரவில்லை நான்
பசியுடன் வந்தேன் மனிதா
பழத்தில் வெடி வைத்தாய்
பாசமுடன் தந்தாய் நினைத்தேன்
பகையுடன் தந்தாய் என்று உணரவில்லை
கடவுளுக்கு படைத்த அமுதென்று நினைத்தேன்
என்னை கல்லறைக்கு அனுப்பும் விஷம் என்று உணரவில்லை!
கருவில் இருந்த குழந்தைக்கு தெரியவில்லை
மண்ணில் வரும் முன் மண்ணிற்குள் செல்வான் என்று
- முத்து துரை சூர்யா
Wednesday, 27 May 2020
உதிரம் தாய்ப்பால் சுரக்கிறது...
உச்சாணியில் நீ இருக்க
உலகம் வேறு இல்லை எனக்கு...
பரவசம் தரும் வண்ணகள் எல்லாம்
உன் கண்ணில் நான் உணர...
முகம் மலரும் மலரின் வாசம் எல்லாம்
உன் மூச்சிக்காற்றில் நான் அறிய...
நாணத்தில் இருக்கும் காலை சூரியனின் அழகை
உன் முகம் உணர்த்த...
வருடலில் தேகம் சிலிர்க்க
வசந்த காலமாய் நீ வந்தாய்...
- முத்து துரை சூர்யா
Sunday, 24 May 2020
சாரல் மழையின் மேன்மை தெரிகிறது...
தூங்கும் நேரம் உதடுகள் சிரிக்கையிலே
மொட்டு மலர்ந்த நேரம் உணர்கிறது...
கால்கள் கோலம் போடுக்கையிலே
காந்தள் மனம் வீசி பறக்கிறது...
கைகள் கழகம் செய்கையிலே
வீரனின் கலை தெரிகிறது...
மொத்தத்தில் என் மடியில்
துயில் கொள்கையிலே
என் மொற்றமும் உன்னில் சரணடைகிறது....
- முத்து துரை சூர்யா👨👩👧
Sunday, 5 April 2020
உன் நினைவுக்கு பின்னால் இருக்கும்
காதல்!.
கதிரவனை காதலிக்கும்
நிலவாய் நீ நின்றாய்
நிலவை காதலிக்கும்
விண்மீன் கூட்டமாய் நான் வந்தேன்!.
பிரிவுடன் நீ நின்றாய்
புரிதலுடன் நான் வந்தேன்!.
சூறைக்காற்றில் நீ நின்றாய்
வருடும் தென்றலாய்
நான் வந்தேன்!.
ஒற்றை மலருக்காய்
ஓரம் நின்றாய்
சோலையுடன்
நான் வந்தேன்!.
வெறுப்புடன் நீ நின்றாய்
புன்னகையுடன் நான் வந்தேன்!.
- முத்து துரை
தாய்மொழி அவனும் நானும்..
காதல் சொல்ல காதல் இருந்தும்.
கண்கள் கெஞ்சிடும் காதலை..
வார்த்தை தோற்கும் நேரம்
கைகள் பிணையும் நேரம்
காதல் வெளிப்படும் நேரம்
எல்லாம் காதலை சொல்லும்..
அவன் மட்டும் சொல்ல மறுக்கும் ஒன்று
அதை ஆசையுடன் எதிர்பார்க்கும் என் செவிகள்...
அலைகள் மோதும் அழகை
ரசிக்கும் அவன் மனம்.
இந்த பெண்ணின் அலைகளை உணர்ந்தும்
ரசித்தும் உள்ளுக்குள் மகிழும்...
காதல் என்ற உறவு
நம்மில்
காமத்தை தாண்டி வளர்கிறது...
-முத்து துரை
இமைகள் இரண்டும் மின்னல் என மின்னிட...
உன் பார்வையில் நான்
என் பார்வையில் நீ..
கருவிழி நான்கும்
நமது பிம்பத்தை மாற்றிட...
உருளும் வட்டமென
கண்கள் உன்னை வட்டமிட..
சிவந்த உதடில்
சிரிப்பு மழை
உதடு விரிவில்
உள்ளம் உருளும்
தேன் கிண்ண வாய்கள்
இணைந்து சத்தமிட
உதடுகள் பேசிடும் இனிய மொழி முத்தம்...
தென்றல் புயலென மாறிடும்
கருமேகம் வெண்மேகமாய்
மாறிடும்.
கடல் அலைகள்
மணல்மேடாய் மாறிடும்..
என் மனமும்
ரணமாகிடும்
அவன் கோபத்தினால்...
-துரை முத்து
என் மகள்
உன்னை அணைக்கையில்
என் மார் துவாரங்கள் எல்லாம் விரிகிறது...
மகளே உன்னை கொஞ்சிடும் போது
மடி எல்லாம் நிறைகிறது...
உன் கண்ண சிரிப்பில்
என் கணம் எல்லாம் மறைக்கிறது....
உன் அழு குரலில்
மனம் எல்லாம் பதைக்கிறது...
பசியில் நீ கைகள் சுவைக்கும் போது
நவரசமும் என்னுள் அடங்கி போகிறது...
ஓடி வரும் கால்கள்
தூக்கிட துடிக்கும் கைகள்
பார்த்திட தூண்டும் கண்கள்
திரும்ப திரும்ப கேக்கும்...
- முத்து துரை
நீ
அவளை மறக்கவும் முடியவில்லை
தவிக்கிறேன் நான்...
இடையினில் வந்தவள்
இமைகளில் இருக்க
கரம் பிடித்தவள்
காதலில் நான் இருக்க
சின்ன தேவதை
சிரிப்புகளில் - இதயம்
சிதறிபோக
நிஜங்களில் திழைக்கவா
இல்லை
நிழல்களில்
தவிக்கவா...
ஏக்கத்துடன் தொடரவா
இல்லை
அமைதியுடன் பயணிக்கவா....
ஆர்ப்பரிக்கும் மனமா
இல்லை
ஆசை கொள்ளும் மனமா...
எதை நான் தொடர!.
அன்புடன் அவள் நிற்க
ஆசையுடன் இவளை தேடி நான்...
இடையினில் தவழும் மழலை சிரிப்பு...
என் காதலில் அவள்
உன் காதலில் நான்...
- முத்து துரை
Tuesday, 14 January 2020
பொங்கல்
துதிதிடும் சூரியனும்
ஒன்றாய் அருள் புரியும்
ஓர் அணுவில் இணையும்
புதிய தினம்
மின்னிடும் கோலங்களில்
மிளிர்கிறது வண்ணங்கள்
எண்ணங்களின் மேன்மை
பொங்கட்டும் பொங்கல் திருநாளில்
_முத்து துரை
சாலையோரம்.
சாலையோரம் மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே! உன் முகங்கள் தானே! தேனே! தேனே! திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...
-
பெரு அலைகள் அதில் தத்தளிக்கும் சிறு ஓடம் போல் - காதலே உன் நினைவுகள்....... கூந்தல் கோதிட்ட விரல்கள் நகக்கண்களை குத்திக்கொண்டு.....
-
இடிகளின் இச்சையில் உடைந்திட்ட பனை மரம் போல் - உடைந்த என் நெஞ்சம் - மறக்க செய்கிறது குழந்தை சிரிப்புப் போல் மலர்கிற உன் நினைவு சுமைகள...
-
பிறை நிலவை தூது அனுப்பினேன் உன் மோக கண்ணை நோக்கியதால் முழுமதி ஆனது... நீலக்கடலை தூது அனுப்பினேன் உன் கால்கள் தொட்டதால் வெண் பூ அல...