Sunday, 24 May 2020

வட்ட நிலவே வளரும் பிறையே
வடிவில் வாமனமே
வளரும் மாருதமே
சினத்தின் வேலே
அமைதியின் துதியே
அறிவின் வீணையே
வளத்தின் தாமரையே

கருவின் உயிரே
உயிரின் உறவே
உறவின் மொழியே
மொழியின் அன்னையே!
தாய்மையை உணர்த்திய தாயே!

- துரை முத்து சூர்யா👨‍👩‍👧

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...