Monday, 30 December 2024

பங்கு வர்த்தகம்

முயலுடன் போக விரும்புகிறேன்

ஆனால் 

ஆமை வேகமே மிக நன்று!


இது நன்று அது நன்று

சொல்லும் தொல்லைகாட்சி

எது நன்று முடிவு என்னிடமே!


கத்துக்குட்டி நான் இன்று

அகல கால் வைக்க முயல்வதேனோ?


தொட்டது எல்லாம் பொன்னாக 

காலம் அதிகம் வேண்டுமோ?


எத்தனை எத்தனை வாசகங்கள்

ஏமாற நான் முயலவில்லை!


முயலுடன் போக விரும்புகிறேன்

ஆனால் 

ஆமை வேகமே மிக நன்று!


சரியும் ஏறும் 

சரித்திரம் படைக்கும்

சரியானதை தேர்ந்தெடுப்பேன்.


சாதனை காலம் வரை 

சாதிக்க நானும் காத்திருப்பேன்


முயலுடன் போக விரும்புகிறேன்

ஆனால் 

ஆமை வேகமே மிக நன்று!


- முத்து துரை












No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...