அருவாய்! உருவாய்!
நீ நின்றாய்
ஆறுதல் நான் தேடினேன்
அடைக்கலம் நீ தந்தாய்
ஆலயம் தான் நுழைத்தேன்
அரவணைப்பை நீ தந்தாய்.
அருவாய்! உருவாய்!
நீ நின்றாய் - முருகா முருகா
ஆரவாரமோடு நான் தொழுதேன்
அழகா ! குமாரா! அருள் புரிவாயே
முருகா! முருகா! தினமும் துதித்தேன்
முத்தா ! முருகா! நீயும் வருவாயே
குமரா! குமரா! குதித்தேனே
குறைகள் களைவாயே!
அருளே! அருளே! உனை அடைந்தேனே
அன்பை நீயும் பொழிவாயே!
பயந்துடன் நான் கிடந்தேனே
மயிலும், சேவலுமாய் காத்தாயே!
சரவணபவ சரணடைந்தேன்
உன்னிடமே!
அருவாய்! உருவாய்!
நீ நின்றாய் - முருகா
- முத்து துரை
No comments:
Post a Comment