நொடிப் பொழுதில்
கரைந்தேன் கரைந்தேன்
யுகம் முழுதும்
தவழ்ந்தேன் தவழ்ந்தேன்
போதை உணர்ந்தேன்
பிறவி எடுத்தேன்
காதல் உணர்ந்தேன்
கற்பனையில் மிதந்தேன்
எல்லாம் என்றேன்
உன்னில் கரைந்தேன்
உயிர்வரை வளர்த்தேன்
உள்ளம் எல்லாம் - உன்னை
வைத்தேன்
உள்ளுக்குள்ளே ஆசை விதைத்தேன்
உயிரைக் கொடுத்தேன்
உதிரம் உதிர்த்தேன்
உயர்வாய் உணர்ந்தேன்
உன்னில் கரைந்தேன்
உயிர்வரை வளர்த்தேன்
வருவாய் எந்தன்
முதல் காதலே!.
- முத்து துரை
No comments:
Post a Comment