காதலித்தேன்
காதல்கள் ஏங்கும்படி
வெற்றி மட்டுமே
என்றேன்
தோல்வியுடன் நிற்கிறேன்.
புன்னகை மட்டுமே
என்றேன்
அழுகையுடன் நடக்கிறேன்.
காதலித்தேன்
காதல்கள் ஏங்கும்படி
குதுகளிப்பு மட்டுமே
என்றேன்
சோகத்துடன் கிடக்கிறேன்.
பிணைப்பு மட்டுமே
என்றேன்
பிரிவுடன் வாடுகிறேன்.
- முத்து துரை
No comments:
Post a Comment