என்னை நேசிப்பவர்கள்
அதிகம் - என்னை
யாசிப்பவரும் அதிகம்
அதிகம் அதிகம்
நான் இருந்தால்
சலுகை அதிகம்...
அழுகை அழுகை
நான் இல்லை
அழுகை அழுகை...
ஆடம்பரம் என்னுள்ளே
ஆதிக்கம் என்னுள்ளே
ஆரவாரம் என்னுள்ளே
அடக்குமுறை என்னுள்ளே
மதிப்பிற்கு நான்
மரியாதைக்கு நான்
பகட்டுக்கு நான்
பிரம்மனும் நானே!
அதிகம் இருந்தால்
அரசும் நானே!
இல்லை என்றால்
ஹா ஹா ஹா ....
பணம் என்னும் நான்....
- முத்து துரை
No comments:
Post a Comment