மனிதன்: ஏன் உன்னை காதலித்தேன்?
பணம்: என்னை காதலிக்காதவர் யாருமில்லை.
மனிதன்: ஏன் என்னை வதைக்கிறாய்?
பணம்: நானா நானா நான் இல்லை, நீ நீ நீயே தான்.
மனிதன் : ஏன் என்னை ஆதிக்கவாதியாக்கினாய்?
பணம் : நான் அதிகம் இருந்தால் அப்படி தான்
மனிதன்: ஏன் என்னை அடிமையாக்கினாய்?
பணம்: என்னில் மயங்காதோர் யாருமில்லை.
மனிதன்: பணமே பணமே கொஞ்சம் நில்லு! ஏன் என்னுடன் வருவதில்லை?
பணம்: எப்போதும் இல்லை இல்லை புலம்புவதால்
மனிதன்: பணமே!பணமே ! ஏன் அடக்குமுறை செய்ய வைத்தாய்?
பணம் : ஹா ஹா ஹா நீ அடக்க நினைத்தற்கு நானா பொறுப்பு.
மனிதன்: கைக்கு கை மாறும் உன்னை ஏன் தினம் தேடுகிறேன்?
பணம் : உன் மனமிடமே கேள்!
மனிதன்: நீ அதிகம் என்னிடம் ஆனால் என்னை நேசிக்க தான் யாருமில்லை?
பணம்: உன் குணம் சேர்க்கும் உண்மையானவர்களை !
பணம்: நான் தான் எல்லாம், என் எல்லை எதுவரை என்பது உன்னிடமே !
மனிதன்: நீ அதிகம் என்னிடம் வர நான் என்ன செய்ய?
பணம்: வாழுவித்து, மகிழ்வித்து வாழடா! உன்னுடனே இருப்பேன், உயர்விப்பேன் !எல்லாம் என்னிடமே
No comments:
Post a Comment