மகளே! மகளே!
மறு உருவே! மறு உருவே!
அன்னையின் மறு உருவே!
என் அன்னையின் மறு உருவே!
ஆறடி உயரமும் - என்
ஆண் மகன் கர்வமும்
அடங்கி அடங்கி
அமைதியானது - உன்
அன்பான பிஞ்சு விரல்களில் ...
அப்பா! அப்பா!
அழகோடு நீ அழைத்தாய்
அழகோடு நீ அழைத்தாய்
அள்ளி தழுவினேனே! - உன்னை
அள்ளி தழுவினேனே!
தவழ்ந்தாய் தவழ்ந்தாய்
நீ தவழ்ந்தாய்
கம்பளமானேனே சிகப்பு
கம்பளமானேனே ...
மகளே! மகளே!
மறு உருவே! மறு உருவே! - என்
அன்னையின் மறு உருவே!
நடந்தாய் தத்தி நடந்தாய்
நடை துணை நானானேன் - உன்
நடை துணை நானானேன் - என்
நுனி விரல் உன்னோடு!
ஆயிரம் கதைகள்
ஆயிரம் கதைகள் வடித்தேனே
ஆனந்தமாய் நீ துயில் கொள்ளவே!
மகளே! மகளே! - என்
அன்னையின் மறு உருவே!
வளர்ந்தாய்! வளர்ந்தாய்!
உன்னுடன் நானும்
வளர்ந்தேன்
குமரியாக நீயானாய்
உன் குழந்தையாக நானானேன்.
தேவதையை! எந்தன் தேவதையை
கரம் பிடித்து கொடுத்தேன்
கண்கள் முழுதும் நீரோடு
மனம்வாழ்த்தியதே!
என் மனம் வாழ்த்தியதே!
அன்பே அன்பே!
தேடுது எந்தன் கண்கள்
வருவாயோ? இன்று
வருவாயோ?
மகளே! மகளே!
மறு உருவே - என்
அன்னையின் மறு உருவே!
No comments:
Post a Comment