வேல் வேல் வேலவா!
குறிஞ்சிக்கொடி வளர்கிறது
உன்னை தேடி வளர்கிறது
குறிஞ்சிக்கொடி வளர்கிறது
பாலகுமரா!
உன்னை தேடி இந்த குறிஞ்சிக்கொடி வளர்கிறது.
முருகா! முருகா!
ஓம் முருகா!
முல்லைத் தோட்டம் வைத்தேன்
முருகா! - உன் வாசம் மணக்க
முல்லைத் தோட்டம் வைத்தேன்.
கார்த்திகை மைந்தனே!
காதலால் தேடினேன்!
கருணை கொண்டவனே!
கருத்தில் எடுப்பாயோ என்னை -உந்தன்
கருத்தில் எடுப்பாயோ என்னை !
அரோகரா! அரோகரா!
குறிஞ்சிக்கொடி வளர்கிறது
பாலகுமரா!
உன்னை தேடி
இந்த குறிஞ்சிக்கொடி வளர்கிறது.
பாலமுருகா!
என்னைத் தேடி நீ வந்தாய்!
பேதை நெஞ்சுக்கு தான் புரியவில்லை
என்னைத் தேடி வந்தாயே முருகா!
ஆறுமுகா ஆறுமுகா !
ஆதரவு தருவாயோ ஆறுமுகா
ஆர்ப்பாட்டம் இல்லாத
அன்பை தான் தருவாயோ?
பேதமை செய்யாத வேலவா!
பக்கத்தில் உந்தன் பக்கத்தில்
எனக்கொரு இடம் தருவாயோ?
குறிஞ்சிக்கொடி வளர்கிறது
பாலகுமரா!
உன்னை தேடி குறிஞ்சிக்கொடி வளர்கிறது.
-முத்து துரை
No comments:
Post a Comment