Wednesday, 29 January 2025

கிராமத்துப் பெண்கள்

தத்தி தாவுது நெஞ்சம்

நாணத்தை அவளின் 

நாணத்தை பாடியபடி

தத்தி தாவுது நெஞ்சம்



இதழ்களில் வழிந்தோடும் கனிரசம்

இதமா மெல் இதமா 

வெளிவரும் பழரசம் - நா 

என்ற பழரசம்


பசைகள் ஏதும் தடவா 

பாலாடை மேனி

இரத்தினங்கள் சிந்திய இரத்தினம்

நாணத்தை அவளின் 

நாணத்தை பாடியபடி நடைப்போடும்


தாவணி கனவுகள் பல கண்டு

தாவுது மனம் அவள் கண்டு

தத்தி தாவுது மனம் அவள் கண்டு.


துள்ளிடும் மீன்கள் 

அள்ளிடும் கண்கள் 

அவள் கண்கள் 


அகராதி தேடினேன்

ஒவிய பாவை - அவளை வர்ணிக்க

அகராதி தேடினேன் 

கிராமத்து பாவையே - உன்னை

வர்ணிக்க அகராதி தேடினேன்.


தத்தி தாவுது நெஞ்சம்

நாணத்தை அவளின் 

நாணத்தை பாடியபடி

தத்தி தாவுது நெஞ்சம்


சந்தங்கள் பல சந்தங்கள் 

சடுகுடு செய்தது - அவளின் அழகை வருட 

சந்தங்கள் பல சந்தங்கள் 

சடுகுடு செய்தது


பாத பூஜைக்கு தவம் செய்யும்

பல வண்ண மலரும் - அவளின் 

படைப்பை ரசிக்க தன்னை கோர்தது 

கூந்தலில் வட்டமிட்ட மறு கணம் 

தன்னை அடிமையாக்கியது

கூந்தலின் மணத்தில் திளைத்து..


நாணத்தை அவளின் 

நாணத்தை பாடியபடி

மேளங்களும், கானங்களும் 

மேலமிடுகிறது..


- முத்து துரை






















Sunday, 26 January 2025

ஆரிராரோ

தாய்மை தவம் மகளே!

தாயானதும் உணர்ந்தேன் மகளே!

உந்தன் தாயானதும் உணர்ந்தேன் மகளே!


போர்களங்களை பூக்களங்களாக்கி

வந்தாய் மகளே என்னுள் 

வந்தாய் மகளே!

காத்தேன் உன்னை 

காத்தேன் மகளே!


மாதங்கள்! பத்து மாதங்கள் 

உருண்டோடியது

உந்தன் அழுகுரலும், அழுகுரலும் 

ஆனந்தம் ஆனது!


மார்முட்டி, மார்முட்டி வளர்ந்தாய்

எந்தன் !

மார்முட்டி, மார்முட்டி வளர்ந்தாய் மகளே


தாய்மை தவம் மகளே!

தாயானதும் உணர்ந்தேன் மகளே!


சோதனை, சோதனை செய்தாய்

பலவாறு என்னை 

சோதனை செய்தாய் மகளே!

சகித்தேன், சகித்தேன் சகியே!

சகலமும் நீ என்று 

சகித்தேன் கண்ணே!


தோள் தாண்டி வளர்ந்தாய் மகளே! 

எந்தன் தோள் தாண்டி வளர்ந்தாய்!


தோழியாக ஆன மகளே! 

எந்தன் ஏற்றங்களும் மாற்றங்களும் 

உன்னால் மகளே!


- முத்து துரை









Friday, 24 January 2025

குறிஞ்சிக்கொடி

வேல் வேல் வேலவா!


குறிஞ்சிக்கொடி வளர்கிறது

உன்னை தேடி வளர்கிறது

குறிஞ்சிக்கொடி வளர்கிறது

பாலகுமரா!

உன்னை தேடி இந்த குறிஞ்சிக்கொடி வளர்கிறது.


முருகா! முருகா! 

ஓம் முருகா!


முல்லைத் தோட்டம் வைத்தேன்

முருகா! - உன் வாசம் மணக்க

முல்லைத் தோட்டம் வைத்தேன்.


கார்த்திகை மைந்தனே!

காதலால் தேடினேன்!

கருணை கொண்டவனே! 


கருத்தில் எடுப்பாயோ என்னை -உந்தன் 

கருத்தில் எடுப்பாயோ என்னை !


அரோகரா! அரோகரா!


குறிஞ்சிக்கொடி வளர்கிறது

பாலகுமரா!

உன்னை தேடி 

இந்த குறிஞ்சிக்கொடி வளர்கிறது.


பாலமுருகா! 

என்னைத் தேடி நீ வந்தாய்! 

பேதை நெஞ்சுக்கு தான் புரியவில்லை

என்னைத் தேடி வந்தாயே முருகா!


ஆறுமுகா ஆறுமுகா !


ஆதரவு தருவாயோ ஆறுமுகா

ஆர்ப்பாட்டம் இல்லாத 

அன்பை தான் தருவாயோ?


பேதமை செய்யாத வேலவா!

பக்கத்தில் உந்தன் பக்கத்தில்

எனக்கொரு இடம் தருவாயோ?


குறிஞ்சிக்கொடி வளர்கிறது

பாலகுமரா!

உன்னை தேடி குறிஞ்சிக்கொடி வளர்கிறது.



-முத்து துரை










Tuesday, 21 January 2025

ஒரு தலை ராகம்!

ஒரு தலை ராகம் ஆனேன்!

ஓராயிரம் கவிதை வரைந்து

ஒன்னோட நினைப்பில் தவித்து

ஒரு தலை ராகமானேன்!


மோதிரம் மாத்த நினைத்தேன்

மோகத்தோடு வரைந்தேன்

காதலே! காதலே!


உசுரே உசுரே நீ தானே!

உள்ளம் எல்லாம் நீ தானே!

கேள்விகள் எல்லாம் நீ தானே

பதில்களும் நீதானே!


ஒரு தலை ராகம் நான் ஆனேன்

பெண்ணே! உன்னால் 

ஒரு தலை ராகம் நான் ஆனேன்..


முத்த மழை பொழிய நினைத்தேன்

என் முத்தங்களால் உன்னை நிரப்ப நினைத்தேன்.

காதலியே என் காதலியே!

காத்திருந்தேன் காதலியே!


உன் பாதங்களைத் தழுவி

மெட்டியிட நினைத்தேன்

காகித படங்களில் 

கானமிட இசைத்தேன்.


கனவுகள் பல கண்டேன் காதலியே!

நீ என் மனைவியாக

கனவுகள் பல கண்டேன் காதலியே!


காலங்கள் எல்லாம்

மறக்காது காதலியே

உன் மேல் நான் கொண்ட காதலை

என் காலங்கள் மறக்காது....


இன்று நீ இல்லை

இருந்தும்.....

உன்னோட நினைப்புல தவித்தேன்


ஒரு தலை ராகமானேன்

பெண்ணே!

ஒரு தலை ராகம் ஆனேன் ....


- முத்து துரை

Saturday, 18 January 2025

மாதவிடாய் !

மாதம் மாதம் விடாமல் 

துரத்தும் மாதவிடாயே!! .

ஐந்து நாளும் - உன் 

வலி வேதனை!


வருவதற்கு முன்னும் 

வந்த பின்னும் 

வலிகள் மட்டுமே! 


ஏன் 

இந்த கொடுமை அழுகிறேன்

கண்ணீர் கூட கரிசனம் காட்டும் 

மாதவிடாயே! - ஆனால்

உன் கரிசனம்?


நீ வந்தாலும் வேதனை 

வரவில்லையென்றாலும் வேதனை! 

மும்முறை முழ்கியும் 

தனியவில்லை உன் 

தணல் மட்டும்.


வேதனை மட்டும் தரும் 

வேதளாமே! - சீக்கிரம் 

வந்து விட்டு போ ! 


- முத்து துரை.





Tuesday, 14 January 2025

ஏறுபிடி

வீரா வீரா வீரா!

ஓடிவா, வீரா!


மஞ்சுவிரட்டும் வீரா!

உந்தன் 

வீரத்திற்கு ஈடா!

வீரத்திற்கு ஈடா!


வீரத்திற்கு வீரத்திற்கு 

ஈடோ! - உந்தன் 

வீரத்திற்கு தான் ஈடோ !


ஏறுபூட்டும் வீரா! 

ஏற்றமுடன் செல்வாயே! 

ஏறுபிடி வீரா!


விளையாட்டு விளையாட்டு இல்லை 

இது 

விளையாட்டு  விளையாட்டு இல்லை

வீரம் வீரம் என்று பறைசாற்றடா !

நீயும் பறைசாற்றடா!


வீரத்திற்கு வீரத்திற்கு 

ஈடோ! - உந்தன் 

வீரத்திற்கு தான் ஈடோ !


Friday, 10 January 2025

வேலவா!

வேலுடன் வீற்றிருக்கும்

வேலவா! 

கதிர்வேலவா!


காத்திருந்தேன் காத்திருந்தேன் உன்னை 

காணவே! காத்திருந்தேன்


சரணம் சரணம் சொல்லியே 

நான் தொழுதேன்

சரவணபவ சரவணபவ என்ற 

சரணம் சொல்லியே

நான் தொழுதேன்.


வேலுடன் வீற்றிருக்கும் 

வேலவா!

எங்கள் வேலவா!


வேலுண்டு வினையில்லை முருகா 

உந்தன் வேலுண்டு 

எனக்கு வினையில்லை முருகா!


கந்தன் என்று சொன்னேன் 

காவலாய் 

எந்தன் காவலாய்

நீ நின்றாயே!


எண்ணினேன் எண்ணினேன் முருகா

எந்தன் எண்ணம் எல்லாம் 

எண்ணம் எல்லாம்

நீதான் முருகா!


வேலுடன் வீற்றிருக்கும் 

வேலவா!

எங்கள் வேலவா!


அழகின் மறு உருவே வேலவா

அழகின் மறு உருவே வேலவா

அமிர்தமாய் அமிர்தமாய் வந்தாயே

எங்கள் வேலவா!


வேலுடன் வீற்றிருக்கும் 

வேலவா!

எங்கள் வேலவா!


- முத்து துரை




வேறு இல்லை!

உன்

துணையன்றி துணையன்றி

வேறு இல்லை


தனி மரமாய் தனி மரமாய்

நானும் நின்றேன் -உன்

துணையன்றி துணையன்றி

வேறு இல்லை -என் துணையே 

உன் துணையன்றி

வேறு இல்லை!


பார் புகழ வேண்டும் என்று

எண்ணினேனே!

ஆனால்

ஆசையினால், பேராசையினால்

சிந்தினேனே!

கண்ணீர் சிந்தினேனே!


என் உலகம் நீ என்று

நம்பினேனே

ஆனால்

எதிர்பார்ப்புகள் பொய் என்று

உணர்த்தினாயே! - என் 

எதிர்பார்ப்புகள் பொய் என்று

உணர்த்தினாயே!


என் துணையே 

உன் துணையன்றி

வேறு இல்லை!


வயதான வாழைமரமாய்

நானும் ஆனேன் - என்

தைரியங்கள் தைரியங்கள்

வீழ்ந்ததுவே -உன்னால்

வீழ்ந்ததுவே!


ஆயிரம் உறவுகள் தாங்கும்

ஆலமரமாய் நானும் நின்றேன்

என் உணர்வுகளை தாங்க

வேறு இல்லை வேறு இல்லை

உன் துணையன்றி வேறு இல்லை


என் துணையே 

உன் துணையன்றி

வேறு இல்லை!


- முத்து துரை










Wednesday, 8 January 2025

பெண்ணே!

என்னுள் முழுவதும் கரைந்தாயே!

ஆதி முதல் அந்தம் வரை 

நீ மட்டுமே!


என்னுள் முழுவதும் கரைந்தாய்

நீ தானே! பெண்ணே!


இதய அறைகள் நான்காம் 

அந்த நான்கிலும் உன் 

ஆதிக்கமே என்றால் 

உன் ஆதிக்கமே என்றால்

என் உதிரம் செல்வது எவ்விடம்?

எவ்விடம்?


தவிக்கும் உதிரத்திற்கு தெரியவில்லை - என்

இதயம் துடிப்பதே உன்னால் பெண்ணே!


என்னுள் முழுவதும் கரைந்தாய்

பெண்ணே!


நரம்புகள் துடிக்கின்றது

நரம்புகள் துடிக்கின்றது - பெண்ணே

உன் பெயரை உச்சரித்தபடியே

என் நரம்புகள் துடிக்கின்றது.


என் கண் என்ற குளத்திலே

என் கண் என்ற குளத்திலே

நீந்துகின்ற மீனானாய்

நீந்துகின்ற மீனானாய்

நீயானாய் பெண்ணே!


என்னுள் முழுவதும் கரைந்தாயே

கரைந்தாயே!


உயிரும் உன்னுடன் கலந்ததே

என் உயிரும் உன்னுடன் கலந்ததே!

உணர்வுகள் எல்லாம் 

நீயானாய் நீ யானாய்!


என் உலகம் முழுவதும் நீயானாய் 

உன்னில் நானும் கரைந்தேனே!

கரைந்தேனே! 


- முத்து துரை












தமிழே!

தரம் உயர்ந்தேன்

தரம் உயர்ந்தேன் - விதைப்போல்

தரம் உயர்ந்தேனே - உன்னால்

தரம் உயர்ந்தேனே!


தலைநிமிர்ந்தேன் 

தலைநிமிர்ந்தேன் 

தமிழே! - உன்னால் 

தலைநிமிர்ந்தேனே!


தழைத்தேன் தழைத்தேன் 

நெற்கதிர் போல் 

தழைத்தேன் - தமிழே!  உன்னால் 

தழைத்தேனே!


செழித்தேன் செழித்தேன் 

மழைகளில் நனைந்த 

நெற்கதிர்கள் போல் - உன்னால்

செழித்தேனே!


நாணினேன் நாணினேன்

வளர் நெற்கதிர்கள் 

நாணுவதைப் போல்

மகிழ்ச்சியால் - உன்னால் 

மகிழ்ச்சியால் நாணினேன்


நன்றி தமிழே! 

பயிர்கள் செழிப்பது போல் உன்னால் 

நானும் செழித்தேனே!


பொங்கல் பொங்கி 

வளம் பொழிவது போல்

தமிழே உன்னால் 

வளர்வேனே!


- முத்து துரை













Monday, 6 January 2025

என் மகள்

மகளே!  மகளே!

மறு உருவே! மறு உருவே! 

அன்னையின் மறு உருவே!

என் அன்னையின் மறு உருவே!


ஆறடி உயரமும் - என்

ஆண் மகன் கர்வமும் 

அடங்கி அடங்கி 

அமைதியானது - உன்

அன்பான பிஞ்சு விரல்களில் ...


அப்பா! அப்பா! 

அழகோடு நீ அழைத்தாய்

அழகோடு நீ அழைத்தாய்

அள்ளி தழுவினேனே! - உன்னை

அள்ளி தழுவினேனே!


தவழ்ந்தாய் தவழ்ந்தாய்

நீ தவழ்ந்தாய்

கம்பளமானேனே சிகப்பு 

கம்பளமானேனே ...


மகளே!  மகளே!

மறு உருவே! மறு உருவே! - என்

அன்னையின் மறு உருவே!


நடந்தாய் தத்தி நடந்தாய் 

நடை துணை நானானேன் - உன் 

நடை துணை நானானேன் - என் 

நுனி விரல் உன்னோடு! 


ஆயிரம் கதைகள் 

ஆயிரம் கதைகள் வடித்தேனே

ஆனந்தமாய் நீ துயில் கொள்ளவே!


மகளே! மகளே! - என்

அன்னையின் மறு உருவே!

வளர்ந்தாய்! வளர்ந்தாய்! 

உன்னுடன் நானும்

வளர்ந்தேன் 

குமரியாக நீயானாய் 

உன் குழந்தையாக நானானேன்.


தேவதையை! எந்தன் தேவதையை

கரம் பிடித்து கொடுத்தேன் 

கண்கள் முழுதும் நீரோடு 

 மனம்வாழ்த்தியதே! 

என் மனம் வாழ்த்தியதே! 


அன்பே அன்பே!

தேடுது எந்தன் கண்கள் 

வருவாயோ? இன்று 

வருவாயோ?


மகளே! மகளே! 

மறு உருவே - என்

அன்னையின் மறு உருவே!

Sunday, 5 January 2025

முருகைய்யா

சினம் கொடியது! கொடியது!

என்று காட்டிடவே 

சிரத்தோடு பழனி மலை சென்றாயோ?

குமரய்யா !


அவ்வை பாட்டி 

அழைப்பாள் என்று

அவ்விடம் சென்றாயோ?

முருகைய்யா!


சினம் தணிந்து

மனம் குளிர்ந்து

குணம் உயர

வைத்தாயோ? 

வர வைத்தாயோ?

பழனி மலைக்கு 


எங்கள் 

முருகைய்யா! 


கர்வம் கலைத்திடவே

மனிதம் கர்வம் கலைத்திடவே!

துறவம் புரிந்தாயோ?

துறவம் புரிந்தாயோ?

எங்கள்

வேலய்யா!!


- முத்து துரை







என் காதலே!

சிற்பிகள் செதுக்கிய

சிற்பம் போல்

அசைவன்றி நிற்கிறேன்

பெண்ணே! உன்னை கண்டதும் 

அசைவின்றி நிற்கின்றேன்.


மேகங்கள் கடலுடன்

கலப்பதுப் போல் - நான் 

உன்னுடன் கலந்துவிட்டேன்.


அலைகளில் நீந்தும் மீனைப்போல்

உன் கண் என்ற கடலில்  - நான்

விழுந்து நீந்துகின்றேன்.


உன்னை கண்டதும் - பெண்ணே

அசைவின்றி நிற்கிறேன்.


துணையை கண்டதும் 

சிலிர்க்கும் மயில்போல்

சிலிர்த்து விட்டேன்

உன்னை கண்டதும் 


ஓடையில் ஓடும் நீருடன் 

ஓடும் மணல் துகள்கள் போல் 

ஓடுகிறது என் மனம் உன்னுடன்.


உன்னை கண்ட முதல் பார்வையில்

என்னை நான் தொலைத்தேன்.

பெண்ணே!

என்னை நான் தொலைத்தேன்.


- முத்து துரை













Friday, 3 January 2025

விநாயகனே.

தோள் சேர் 

முதல்வனே! முதல்வனே!

என் விநாயகனே!


துதித்தேன் துதித்தேன் 

உன்னை விநாயகனே!

துதிக்கையால் உன் 

துதிக்கையால் உயர்த்திய

தூயவனே!


அப்பமும் பொரியும் வைத்தேன்

அப்பனாய் அப்பனாய் - என்

அப்பனாய் என்னுடனே நடந்தவனே!


சுழியாய் சுழியாய்

பிள்ளையார் சுழியாய் வரைந்தேனே

சுழல்கள் என் சுழல்கள் 

அனைத்தையும் கலைந்தவனே!


எங்கும் எங்கும் உன்

திருநாமங்கள் முதலில்

இசைக்கும் இசைக்கும் - உன்

திருநாமங்கள்


முதல்வனே! முதல்வனே!

என் விநாயகனே!


வினைகள், வினைகள் 

எனகில்லை விநாயகனே

நின்னை

நான் சரணடைந்தேன் 

வினைகள் வினைகள்

எனகில்லை!


என் ஆரம்பம் ஆரம்பம்

நீதானே! - விநாயகனே!

என் விநாயகனே! 

என் இறுதிவரை காத்திடும்

என் விநாயகனே!


அப்பமும் பொரியும் வைத்தேன்

அப்பனாய் அப்பனாய் - என்

அப்பனாய் என்னுடனே நடந்தவனே!


முதல்வனே! முதல்வனே!

என் விநாயகனே!


- முத்து துரை












Thursday, 2 January 2025

பொன்னே! பொன்னே!

பொன்னே! பொன்னே! 

மின்னும் பொன்னே!

காண்பவர் கண்ணை 

கவரும் பொன்னே! - என் 

கண்மணியே! - என்

காதலியே!


பொன்னே! பொன்னே! 

கதிரவன் போல்

மின்னும் பொன்னே! 

என் கண்மணியே!


அழகின் வடிவம் பொன்னே!

அன்பாய் அரவணைக்கும் முன்னே - உன்

பார்வையால் கொள்ளும் கண்ணே !


முகிலின் வடிவம் பொன்னே!

பரிசமாய் வருடும் முன்னே - உன்

பார்வையால் கொள்ளும் கண்ணே !

என் கண்மணியே!


பொன்னே! பொன்னே!

மின்னும் பொன்னே !

என் கண்மணியே!


காவியமாய் வந்தாய் பொன்னே! - என்

கனவிலும் நீ தான் பொன்னே!

கற்பனையில் வரைந்தேன் உன்னை

கரம்பிடித்திடவே!


உரிமை தந்தாய்  பொன்னே - என்

உணர்விலும் நீ தான் பொன்னே!

கவிதைகளால் வடித்தேன் உன்னை

மணந்திடவே !


பொன்னே! பொன்னே!

மின்னும் பொன்னே !

என் கண்மணியே!

காதலியே!


காத்திருப்பேன் உன்னை சூடிடவே 

காத்திருப்பேன் - என் 

காலம் உள்ளவரை உன்னுடன் 

வாழ்ந்திடவே!


காணிக்கையாய் எனை தந்து

காதலியாய் உனை 

கைகளில் ஏந்தினேன்!

காலம் உள்ளவரை உன்னுடன் 

வாழ்ந்திடவே!


பொன்னே! பொன்னே! 

மின்னும் பொன்னே!

என் கண்மணியே!

என் காதலியே!


- முத்து துரை










Wednesday, 1 January 2025

தங்கம்

ஜொலிக்கும் ஜொலிக்கும் 

தங்கமே! 

எனை ஈர்ப்பது ஈர்ப்பது ஏனோ?


ஹா ஹா ஹா என் தோற்றம் அப்படித்தான்..


பொலிவுடன் பொலிவுடன்

புன்னகைத்து எனை 

இழுப்பது  இழுப்பது ஏனோ?


ம்ம்... ம்ம்... ஈர்க்கும் வலிமை அப்படித்தான்.


பொக்கிஷம்! பொக்கிஷம்!

நீ என்னுடன் வருவதால்

இனபுரியா ஆனந்தம் ஏனோ?

பாதுகாப்பு நீ 

பரிசமாக நீ

பரிவுடன் உனை வருடினேன்.


ஹா ஹா ஹா நான் தான்

நான் தான்

நானே தான்!


தங்கமே! தங்கமே!

இன்னும் கொஞ்சம் இரு

இன்னும் கொஞ்சம் இரு


உன் அடமானம் நான் தானே

நான் சென்று வருகிறேனே!


பொன்னே! பொன்னே!

பிறரிடம் இருந்தால் 

பொறாமை வருவது ஏனோ?


ம்ம்... உன் ஆழ்மனதில் 

என் இடம் ஆழம் அதனால்!


- முத்து துரை








சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...