Sunday, 9 February 2025

ஏன் பிரிந்தாய்

ஏன் என்னை பிரிந்தாய்

ஏன் என்னை மறந்தாய்

ஏன் என்னை வதைத்தாய்!


என் உயிர் வரை கலந்தாய்

என் உணர்விலும் உறைந்தாய்

ஏன் என்னை பிரிந்தாய்!


நிழல் எல்லாம் நீயாகி என்னுள் இருந்தாய்

நிஜமெல்லாம் நீயாகி என்னுள் வளர்ந்தாய்


ஏன் என்னை பிரிந்தாய்

ஏன் என்னை மறந்தாய்!!!


நித்தம் நித்தம் உன் நினைப்பில் 

பித்தன் ஆனேனே!

சித்தம் எல்லாம் -என் 

சித்தம் எல்லாம் நீயும் ஆனாயே!


நீயும் ஆனாயே எல்லாம் 

நீயும் ஆனாயே! 


அலைகளில் முழ்க பார்த்தேன் 

அந்த அலைகள் கூட வெறுத்தது

தன்னில் இணைக்க மறுத்தது 


காதல் தோல்வியில் 

கண்ணீர் வடித்தேன் 

கண்கள் முழுதும் 

நீதான் நின்றாய்!


ஏன் என்னை பிரிந்தாய்

ஏன் என்னை மறந்தாய்!!!


இதய கூட்டை 

இடித்து பாத்து 

இனிப்பை தந்தாயே!


மழையில் முளைத்த காளானாக 

நானும் ஆனேனே -உன்னிடம்

நானும் ஆனேனே!


ஏன் என்னை பிரிந்தாய்

ஏன் என்னுள் பிறந்தாய்


காதல் கோட்டையைத் தகர்த்து பாத்து

கனவில் வந்து 

புன்னகை புரிகின்றாய்.


நீயும் புன்னகை புரிகின்றாய்!


தனநனநனந தனநனநனந


ஏன் என்னை பிரிந்தாய்

ஏன் என்னை மறந்தாய்

ஏன் என்னை வதைத்தாய் 


-முத்து துரை





No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...