பட்டாம்பூச்சிக் கூட்டம்
படபடவென என்னுள்
ஏதோ செய்கிறதே
என்னுள் ஏதோ செய்கிறதே!
கூட்ட நெரிசலில்
கூடுவிட்டு கூடு பாய்ந்து
கூராாய் நுழைந்தது
உன் முகமே!
இருக்கைகள் இருந்தும் - நீ
இருக்கும் இடம் தேடி
கால்கள் நகர்கிறதே! என்
கால்கள் நகர்கிறதே!
பாலுக்கும், துகளுக்கும்
தேனீர் குவளையில்
மலர்ந்திடும் காதல் போல்
மணம் வீசுகிறதே!
பட்டாம்பூச்சிக் கூட்டம்
படபடவென என்னுள்
ஏதோ செய்கிறதே
என்னுள் ஏதோ செய்கிறதே!
ஜன்னலோர இருக்கைக்கு
அலைமோதும் கண்கள்
இன்று
உன்னை நோக்கி அலை மோதுகிறதே!
அவன் யார் என்று தெரியவில்லை
பேர் என்ன ம்ஹூம்ம்.....
மனம் மட்டும் அவன் பின்னே
என் மனம் மட்டும் அவன் பின்னே
தினம் தினமும் பயணித்தேன்
இன்றாவது உன் கண்கள்
இன்னிசைக்காதா?
என்னை நோக்கி நீயும்
உன்னை நோக்கி நானும்
ஆ ஹா ஆ ஹா ஆ ஹா....
படிக்கட்டில் பயணம்
படபடக்குது என் மனம்
படைப்பாளனே உள் வருவாயோ
ஏங்குது பெண் மனம் ....
நீ காண வேண்டும் என்று
நாளொரு வண்ணம் நானும்
நாளிதழ் ஏந்துகின்றேனே....
உன் புத்தகங்கள் தரும் வேளை
என் சத்தங்கள் கேட்கிறது
உன் பெயர் என்ன தெரிந்துகொள்ள
என் சத்தங்கள் கேட்கிறது ......
பட்டாம்பூச்சிக் கூட்டம்
படபடவென என்னுள்
ஏதோ செய்கிறதே
-முத்து துரை
No comments:
Post a Comment