Tuesday, 4 February 2025

திருநெல்வேலி

திருநெல்வேலி வந்து பாரு

திருப்பங்கள் உனக்கு உண்டு பாரு!


திருச்செந்தூர் முருகனடா

திருப்பங்கள் உனக்கு தருவானடா!


வேலியாய் நாங்கள் இருப்போமடா

வேங்கையே வந்தாலும் எதிர்ப்போமடா

திருநெல்வேலி சீமையடா

சீவலப்பேரி கோட்டையடா!


உப்பள காத்து வீசுதடா

உசுரா நாங்க இருப்போமடா!

திருநெல்வேலி சீமையடா

சீவலப்பேரி கோட்டையடா!


பாலைவனமும் கிடக்குதடா!

பசுநெல்லும் இங்கே விளையுதடா!

ஐந்து நிலமும் இருக்குதடா!

ஐயம் வேண்டாம் உனக்கடா!


மலைகளும் இங்கே மலருதடா

மரங்களும் இங்கே மகிழுதடா

வயல்களும் இங்கே வருடுதடா

கடல்களும் இங்கே கனியுதடா!

மணலும் இங்கே மணக்குதடா!



திருநெல்வேலி வந்து பாரு

திருப்பங்கள் உனக்கு உண்டு பாரு!


திருச்செந்தூர் முருகனடா

திருப்பங்கள் உனக்கு தருவானடா!


- முத்து துரை





No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...