ஒவ்வொரு விடியலுமே விடிகிறதே!
ஒவ்வொரு விடியலுமே விடிகிறதே!
நம்பிக்கை என்ற ஒன்றாலே!
ஒவ்வொரு மனதுமே மலர்கிறதே!
லட்சியம் என்ற ஒன்றாலே!
அவமானங்கள் பல சந்தித்தும்
கண்ணீர்கள் பல சிந்தித்தும்
வாழ்வது இந்த வாழ்க்கையே
தேடுது அந்த வெற்றியே!
கல் ஒன்று தடுக்கிறது என்றால்
உளிக் கொண்டு சிலையாக்கு!
சொல் ஒன்று வதைக்கிறது என்றால்
உயர வேண்டும் உள்வாங்கு!
வெற்றியும், தோல்வியும் உன்னிடமே
அதன் மேல் கொண்ட காதல் சொல்லிடுமே!
வெற்றியோ! தோல்வியோ! முயன்று விடு
முடிவுகள் அதனிடமே கொடுத்து விடு!
பூக்கள் பூத்து உதிர்கிறது
அதன் பயனும் முடிகிறது
சருகாக காய்ந்த பின்னும்
உரமாக மாறுகிறது .....
தேனீக்கள் தேனை தான்
சிறுக சிறுக சேர்கிறது
ஏமாற்றம் தெரிந்தும் தான்
திரும்பத் திரும்ப முயற்சிக்கிறது....
மனமே! மனமே கொஞ்சம் நில்லு
கலங்காதே எல்லாம் உந்தன் கையில்
எறும்புகள் சோர்வதில்லை
இயற்கையும் வீழ்வதில்லை
மனம் மட்டும் ஏன் துடிக்கிறது
மலையோடு போராட வெறுக்கிறது
போராட்டம், போராட்டம் மட்டுமே என்று கலங்காதே
போராட்டம் முடிந்திடுமே!
முடிவுகள் ஒரு நாள் வரும் தளராதே!
உன்னோட விடியலாக அது மாறிடுமே!
மனமே! மனமே கொஞ்சம் நில்லு
கலங்காதே! கலங்காதே! எல்லாம் உந்தன் கையில்
ஒவ்வொரு விடியலுமே விடிகிறதே!
நம்பிக்கை என்ற ஒன்றாலே!
ஒவ்வொரு மனதுமே மலர்கிறதே!
லட்சியம் என்ற ஒன்றாலே!
- முத்து துரை
No comments:
Post a Comment