Saturday, 15 February 2025

கணவன் - மனைவி

சிறு துளியாய் என் நெஞ்சில்

நீ நுழைந்தாய்!


மழையாய் பெரும் மழையாய்

மாறிவிட்டாய்!


பார்த்த முதல் நாளே

உன்னை பார்த்த முதல் நாளே

நானும் தொலைந்தேனே 

உன்னுள் நானும் தொலைந்தேனோ!


மொழிகள் முழுவதும் நீயானாய்!


வலைத்தள தேடல்  முழுவதும் நீயானாய்!


வார்த்தையாய் 

என் நெஞ்சில் நீ நுழைந்தாய்!


வரிகளாய் 

காதல் வரிகளாய் 

என்னுள்ளே நீ மிதந்தாய்!


இசையாய் 

மெல்லிசையாய் 

என்னையும் நனைய வைத்தாய்!


உன் பெயரும், என் பெயரும் சேர்ந்திடவே

உன் கையும், என் கையும் கோர்த்திடவே

உன் உறவும், என் உறவும் சேர்ந்திடவே

நாளும் நெருங்கியதே!

இனிய நாளும் நெருங்கியதே!



சிறு துளியாய் என் நெஞ்சில்

நீ நுழைந்தாய்!


நாணம் வழிகிறதே! 

என்னுள் நாணம் வழிகிறதே!


நாளும் வருகிறதே!

உன்னுடன் பயணிக்கும் 

நாளும் வருகிறதே!


கைகோர்த்து கதைக்க 

பல கதைகள் இருந்தும்

கதைக்காமல் செல்கின்றோம் நாம்தான்!

கதைக்காமல் செல்கின்றோம் நாம் தான்!


நாளும் வருகிறதே

உன்னுடன் சேரும் 

நாளும் வருகிறதே!


கானல் மழையில் நனைகின்றேன்

கனவுகளுடன் 

கானல் மழையில் நனைகின்றேன்!


சிறு துளியாய் என் நெஞ்சில்

நீ நுழைந்தாய்!


மழையாய் பெரும் மழையாய்

மாறிவிட்டாய்!


- முத்து துரை








No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...