Tuesday, 11 February 2025

உறவுகளும் தானே

துன்பத்திலே இல்லை உறவுகளும் தானே

இன்பத்திலே மட்டும் உறவுகள் தானே!


பணத்தின் மதிப்பு இல்லை என்றால் தெரியும்

குணத்தின் மதிப்பு பணத்தினால் புரியும்

பணமா? குணமா? அளவிடும் உறவும்!


குணம் மட்டும் இருந்தால்

குழப்பங்கள் இல்லை


குழப்பத்திற்கு என்றே வரும் 

இந்த உறவுகளும் தானே!

உறவுகளும் தானே!


அற்பனுக்கு இங்கே வாழ்வு வந்த போதும்

சொப்பனத்தில் இருந்தே வீழ்ந்து விடும் வாழ்வும்!


துன்பத்திலே இல்லை உறவுகளும் தானே

இன்பத்திலே மட்டும் உறவுகள் தானே!


பகலவன் போலே 

பகிர்ந்திடும் உறவும் 

கிடைத்துவிட்டால் நீயும்

கொடுத்து வைத்தவன் தானே

கொடுத்து வைத்தவன் தானே!


போதைக்கு உண்டு

பாதைக்கு இல்லை!


பகட்டு இல்லா உறவும்

கிடைத்துவிட்டால் நீயும்

வென்றிடுவாய் உலகை!

வென்றிடுவாய் உலகை!


அன்றிருந்து இன்றும்

மாறவில்லை உலகும்

மாறவில்லை உறவும்

மாற்றம் நோக்கி

நாமும் நகர வேண்டும் தானே!


துன்பத்திலே இல்லை உறவுகளும் தானே

இன்பத்திலே மட்டும் லாலலலாலா!


- முத்து துரை




No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...