Monday, 17 February 2025

கவி கவியாய்

கவி கவியாய்! 

கவியாய்!

உந்தன் புகழை பாட வா!


வேலா! 

உந்தன் புகழை பாடவா !


செவி செவியாய் 

செவியாய் 

எந்தன் 

செவி வழியாய் கேட்ட 

புகழை பாடவா!



கவி கவியாய்!

கவியாய்

புகழைப் பாடவா !


மயிலுடன் நீ வரும் 

அழகை பாடவா!


மயில்வாகனனே உந்தன்

அழகை பாடவா!


தமிழுக்கு நீ தந்த 

தகவல் பாடவா!


அகரங்களை முதலாக

அடுக்கி பாடவா!

அடுக்கி பாடவா!


உந்தன் புகழை பாடவா!

நீ அருளிய கொடையை பாடவா!


கவி கவியாய்

கவியாய்

நான் பாடவா !


அவ்வையிடம் வினவிய

வினாவை பாடவா!


குழந்தையில் நீ செய்த 

குறும்பை பாடவா!


குமரனாய் நீ செய்த

காதல் பாடவா !


என்ன நான் பாட 

என் முருகா 

உன்னை பற்றி என்ன நான் பாட

உன்னை பற்றி பாட

அருளைத் தருவாய் எனக்கு

அரோகரா! அரோகரா!


- முத்து துரை

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...