Thursday, 6 February 2025

அறிமுகம்

அறிமுகம் இல்லை அவளிடமே

அறிமுகம் தேடுது என் மனமே


அவனைக் கண்ட நொடியிலே 

அவன் வசமானது என் மனமே 


அறிமுகம் இல்லை அவளிடமே!


அவன் வசமானது என் மனமே!


தூரத் தேசத்து ஓவியமே 

தூரிகை வரைந்தேன் உன்னையுமே 


காதல் கடிதம் நான் எழுத 

கற்பனையில் மிதந்தேன் உன்னுடனே


வண்ணம் கொண்ட வானவில்லே 

வருவாயோ எந்தன் மேகத்திலே 

வலக்கை பிடித்து வலம் வந்து 

வாழ்க்கைத் துணையாய் ஆவாயோ!


கற்பனை நிறைந்த காதலனே!

காதலால் என்னை கொல்வாயோ

காதலால் என்னை கொல்வாயோ!


வண்ணம் கொண்ட வானவில்லே

வாழ்க்கைத் துணையாய் ஆவாயோ!


கற்பனை நிறைந்த காதலனே!

காதலால் என்னை கொல்வாயோ!


அறிமுகம் இல்லை அவளிடமே

அறிமுகம் தேடுது என் மனமே


அவனைக் கண்ட நொடியிலே 

அவன் வசமானது என் மனமே 


வரிகளின் அலங்காரம் இசையாக என் முன்னே!

வார்த்தையின் அலங்காரம் கவியாக என் முன்னே!


பாடலின் முதல் வரியும் 

பயணிக்கும் பல்லவியும் 

இடைத்துடிக்கும் நாதமும்

உருகிடும் வார்த்தையும் நீயே என்னம்மா!


காமத்தின் மறுபெயரும் 

காதலின் காவியமும் 

காட்டிடும் அரக்கனும் 

கண் பேசும் கவிஞனும் நீயே என்னவா!.


அறிமுகம் இல்லை அவளிடமே

அறிமுகம் தேடுது என் மனமே

அவனைக் கண்ட நொடியிலே 

அவன் வசமானது என் மனமே 


தூரத் தேசத்து ஓவியமே 

தூரிகை வரைந்தேன் உன்னையுமே 


காதல் கடிதம் நான் எழுத 

கற்பனையில் மிதந்தேன் உன்னுடனே



- முத்து துரை 

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...