வறுமைகள் போக்கியே!
வாழ வைப்பாயே!
வாழ வைப்பாயே!
சிறுமைகள் தளர்த்தியே!
சிறப்புற செய்வாயே! செய்வாயே!
மரங்களும் வளர்ந்தது
மலைகளும் செழித்தது
மழைகளும் சிலிர்த்தது
எல்லாம் உன்னாலே! உன்னாலே!
ஞாலம் வளர்ந்தது
நாளும் உயர்ந்தது
ஞானம் பிறந்தது
நாயகி உந்தன் அன்பாலே! அன்பாலே!
என் தாயே!
பராசக்தி நீயே!
ஆதி பராசக்தி நீயே!
காப்பாயே! எம்மை
கள்வம் நிறைந்தது
கர்வம் உயர்ந்தது
கடமை தளர்ந்தது
களையெடுக்க வருவாயோ!
தீமைகள் ஒழிந்திட
தீயதை களைந்திட
தீர்ப்புகள் தந்திட
அவதாரம் எடுப்பாயோ
அவதாரம் எடுப்பாயோ !
எங்கள் தாயே!
பராசக்தி நீயே!
ஆதி பராசக்தி நீயே!
காப்பாயே! எம்மை
வறுமைகள் போக்கியே!
வாழ வைப்பாயே!
வாழ வைப்பாயே!
சிறுமைகள் தளர்த்தியே!
சிறப்புற செய்வாயே! செய்வாயே!
- முத்து துரை
No comments:
Post a Comment