Sunday, 23 February 2025

தாவணிக் கனவுகள்

கண்ணுக்குழி அழகே

கூறு போடும் திமிரே

மச்சங்களில் கோர்த்த

மாமனின் மகளே!


ஆயிரம் கனவுகள்

நானும் கண்டேன் உன்னுடனே

அதைப் பேசிட வேண்டும் 

நாட்கள் முழுவதுமே


வயல்களின் நடுவே ஓடிடும் வரப்பே

மயில்களின் அழகை காட்டுது உன் முகமே

 நெருஞ்சிலின் முள் போல் 

குத்துது உன் நினைவே

ஓடைகள் தேடும் ஓரிரு துளியே!


கரிசக்காட்டு மணமே

காட்டுது உந்தன் நிறமே

தென்னங் கீற்றின் நடுவே

கீச்சிடும் குயிலே!

பதநீரின் போதை

தரும் உந்தன் உதடே!


தட்டாம்பூச்சி பிடிக்க 

தாவிடும் கையே

தாவணிப் பொண்ணே

தங்கமே என் கண்ணே!


முறுக்கு மீசை வச்ச மாமா முறுக்காதே

மொத்த அழகில் என்னை நீயும் மயக்காதே!

உழவு காட்டில்

உசுர நீயும் வாங்காதே

உதவிக்கு வந்தா 

உரசி உரசி போகாதே!


ரொம்ப தான் அழுத்துகிற நீ தான்

ரொம்ப தான் சிலுத்துகிற நீ தான்

ஆசையா கொஞ்ச வந்தா

ஆயுதம் ஏந்துகிற நீயும் 

தொட்டாச்சிணுங்கி கண்ணத்தான்

தொடாம போவேணோ நானும் தான்


தாலி தான் கட்டிய பின்பு தான்

தாரம் தான் ஆன பின்னும் தான்

தாடிக்குள் தாவணி கனவுகள் துடிக்கிறதோ?



கண்ணுக்குழி அழகே

கூறு போடும் திமிரே

மச்சங்களில் கோர்த்த

மாமனின் மகளே!


தொட்டாச்சிணுங்கி கண்ணத்தான்

தொடாம போவேணோ நானும் தான் ......


- முத்து துரை


No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...