Wednesday, 12 February 2025

என் காதலே !

என்னோடு வா! என் காதலே! 

என் காதலே!


ஊசியில் நுழையும் நூல் போல் 

உன் நினைவுகள் 

என் மனதில் துளைத்துத் துளைத்து 

துளையிடுகிறதே!


சிரிப்பை மறந்த என் இதழ்கள் 

மவுனத்தை மட்டும் உதிர்கிறதே!


பேனா முனை கிழித்து 

காயம் பட்ட காகிததிற்கு மருத்தாக

கவிதைகள்  - உன் பெயரை

எழுதி எழுதி தேய்கிறதே.!


என்னோடு வா என் காதலே !

கைகோர்க்க துடிக்குது என் மனமே!


காயம் பட்ட என் இதயத்திற்கு

காதலை நீ தருவாயோ! !


அலைகளில் நீத்தும் நிலவின் 

முகம் போல் - என் நினைவிலே உன்

முகம் தானே நீந்துகிறதே!


என்னோடு வா! என் காதலே! 


என் மவுனத்தை களைக்க 

என்னோடு வா! என் காதலே! 



உன் கூந்தலை கோதிட

என்  நகக்கண்கள் துடிக்கிறதே!


ஆயிரம் ஜனனங்கள் நான் எடுப்பேன்

உன் கூந்தலில் மரணித்திட 

ஆயிரம் ஜனனங்கள் நான் எடுப்பேன்


என்னோடு வா! என் காதலே! 

என் பயணங்கள் முடிவதற்குள்

என்னோடு வா என் காதலே !


- முத்து துரை








No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...