Friday, 21 February 2025

தலைவனை தேடும் தலைவி


கள்வனே! கள்வனே!

உன்னை தேடுது பெண்மையே!

மாற்றினாய் மாற்றினாய்

என்னையும் உன்னை போல்

தூரதேசம் சென்றதால்

தூது விட்டேன் என்னையும் ....

துடிக்குது பெண்மையே

துள்ளி நீ வருவாயே!



தொலைதூர பயணம் சென்றேன்

தொடுவானம் நீதான் என்றேன்

நெடுஞ்சாலை தனிமை எல்லாம்

நினைவோடு நானும் சென்றேன்!

மேகங்களின் மேலே சென்றாலும்

தேடுது உந்தன் முகமே!




கொடிகள் படர தேடும் 

செடி போல் 

உன்னை  தேடுது  பெண்மையே!

தொலைபேசி மணியோசை

அதில் கேட்கும் உன் ஓசை

நேரிலே எப்பொழுது

தினம் கேட்கும் என் ஓசை.

கள்வனே! கள்வனே!



ஓ!

கடற்கரைச் சாலை எல்லாம்

கலவரம் கொண்டது

நீ இன்றி வந்ததால்

கலவரம் கொண்டது

கருவிழியே உன்னையுமே

கடத்திட துடிக்குது என் மனமே!



கடிதம் வரைய நினைத்து 

கவிதைகள் பல கோர்த்து 

எந்தன் துணையே! 

உந்தன் நினைவில்

உருகுகிறேன் நானுமே!



பாதகை உந்தன் பாதகை

தினம் வருடும் கைகளே!

நீ அனுப்பிய குறுஞ்செய்தியை

மனனம் செய்யும் பெண்மையே! 

வார்தைகள் முழுவதிலும்

வாழ்கிறேன் உன்னுடனே.....

தூரதேசம் சென்றதால்

தூது விட்டேன் என்னையுமே ....


திங்கள் தேடும் தேசம் இது

தென்றல் தேடுது என் மனது

பரிச்சயம் இல்லை முகங்களுமே

பதிவை தேடுது என் மனமே

உந்தன் 

பதிவை தேடுது என் மனமே!



தொலைபேசி மணியோசை

அதில் கேட்கும் உன் ஓசை

நேரிலே எப்பொழுது

தினம் கேட்கும் என் ஓசை.



வருவாயோ! சீக்கிரம் 

வருவாயோ! 

நித்தம் நித்தம் 

கரைகிறது பெண் மனமே!


- முத்து துரை

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...