ஓரக் கண்களால்
ஒரு கவிதை
என்னை கொல்லுதே!
கண்கள் பேசிடும் காதலை
கண் ணிமை மூடாமல்
ரசிக்குதே!
கண் ணிமை மூடாமல்
ரசிக்குதே!
ஓ!
இது காதல் தானோ!
ஓ!
இது போதை தானோ!
வானிலை மாற்றம் நிகழுதே!
புயலும் இங்கே தென்றலாய் வருடுதே!
பேரிறைச்சலும் இன்னிசையாய் கேட்குதே!
காதலின் தினம் இன்று
காதலால் நிரம்புதே!
கானங்களின் இசைகளும்
காதலை இன்று சொல்லுதே!
ஹே !
பூந்தோட்ட கிளி தானே!
ஹே!
புது வெள்ளை மழை தானே!
உன்னைப் பார்த்ததும்
நகரவில்லை - என்
நாட்களும்!
ஓரக் கண்களால்
ஒரு கவிதை
என்னை கொல்லுதே!
கண்கள் பேசிடும் காதலை
கண் ணிமை மூடாமல்
ரசிக்குதே!
பறந்திட பறந்திட
மனம் இன்று துடிக்குதே!
அவனைக் கண்டதும்
காரணம் இன்றி கரையுதே!
மெல்லிசை தென்றலும் நீ தானே!
மேல் அங்கமும் நீ தானே!
வெண்ணை திருடிய
கண்ணன் போல்
உன்னை திருடிட
மனம் இங்கு துடிக்குதே!
ஓ!
புது வெள்ளை மழையா!
ஓ!
பனிகளின் சிலையா!
ஓரக் கண்களால்
ஒரு கவிதை
என்னை கொல்லுதே!
லால லல லால லலலா
- முத்து துரை
No comments:
Post a Comment