நீ கவிதை
நான் கவிஞன்
உன் வரிகளில் நான் வாழ்வேன்!
நீ கற்பனை
நான் காதலன்
நம் காதலை வரைந்திடுவேன்.
நீ பேனா
நான் காகிதம்
உன் பெயரை தினமும் எழுதிடுவேன்.
நீ சிந்தை
நான் செயல்
உன் எண்ணம் போல் நானிருப்பேன்.
நீ கவிதை
நான் கவிஞன்
உன் வரிகளில் நான் வாழ்வேன்!
நீ கண்ணீர்
நான் கைகுட்டை
நீ விழும் போது தாங்கிடுவேன்.
நீ சிற்பி
நான் சிற்பம்
உன் வலிகள் முழுவதும் நான் ஏந்துவேன்....
நீ பனிக்காற்று
நான் செவிப்பறை
காதோரம் நீ வீசிட காத்திருப்பேன் ....
நீ பாதம்
நான் பாதை
நீ செல்லும் வழியிலே உருவாகுவேன் ......
நீ நீர் துளி
நான் தாகம்
தாகத்தை தணிக்கும் வரை தவித்திருப்பேன்
நீ மனைவி
நான் கணவன்
காலம் வரை உடன் இருப்பேன்......
நீ தேவதை
நான் யாசகன்
யாசித்தே வாழ்ந்திடுவேன் ....
நீ தேவதை
நான் யாசகன்
யாசித்தே வாழ்ந்திடுவேன் ....
- முத்து துரை