Saturday, 16 December 2023

இரு சக்கரம்

உன் இரு சுழலில் 

உள்ளம் மகிழ்ந்தேன்

உவகை தேடி அலைந்தேன்

உன்னை வர்ணிக்க...

உன்னை காணும் ஆர்வம்

உன்னை தொட்டு தழுவிய நிமிடம்

என் பயணம் உன்னுடன் 

என் இரு சக்கரமே!..


- முத்து துரை 


Saturday, 9 December 2023

எல்லாம் நீயே!

நானே பேசிக் கொள்கிறேனாம்
அவர்களுக்கு புரியவில்லை - நான்
உன்னோடு பேசிக் கொண்டு இருக்கிறேன் என்று...

பைத்தியமா என்கிறார்கள்
ஆம் 
நான் உன் மீது பைத்தியம் தான்...

ஏதோ பிதற்றுகிறேன் என்கிறார்கள்
உனக்கு மட்டும் எப்படி புரிகிறது நான் சொல்வது என்னவென்று...

தனிதிருகிறேன் என்கிறார்கள்
அவர்களுக்கு தெரியவில்லை - நீ
என்னோடு இருப்பது....

எல்லாம் நீயே என்று போனேன் 
எல்லாம் நீயே என்னுள் ..

- முத்து துரை 







Saturday, 28 October 2023

போர் போர்

ஏன் இந்த நிலை ?
பார்ப்பதற்கே பதைக்கிறதே
ஐயோ இறைவா !
எப்படி தாங்குகிறது 
எண்ணற்ற இதயங்கள் 
வானில் இருந்து விழுவது 
வானம் தரும் கொடையா!
இல்லை 
மனிதம் தரும் வலியா!
என்னவென்று தெரியாமல் விடியல்கள் 
எத்துணை எத்துணை 
பச்சிளம் இதயங்கள் 
உங்கள் பகைக்கு 
பிஞ்சிகள் என்ன செய்ததோ!
போர் போர் என்று 
போகும் மனமே !
உங்கள் போதைக்கு 
பலிகள் ஏனோ 
பாவப்பட்ட மனிதங்களே!

-முத்து துரை 

Sunday, 15 October 2023

நிஜமா! நிழலா!


நிழலாடும் போது

நிஜம் தேடுகின்றேன்...

நிஜம் தேடும் போது

நிழல் எங்கு என்றேன்...

நிஜமே நிழலாகும் போது

நான் எதை தேடுவேன்?


நிழல் என்றும் 

நிஜம் என்றும் 

நிஜம் கலந்த நிழல் என்றும்

நிழல் கலந்த நிஜம் என்றும் 

பாகுபாடு தெரியவில்லை...


பாகுபாடு தெரிந்தும் கூட 

நிழல் எங்கே தேடுது 

நிஜம் தோற்ற போது

நிழல் காரணம் என்றால்

எதை கொண்டு வீழ்ந்தேன்

நிஜம் புரியவில்லை...

நிஜம் காட்டும் முகங்கள் 

நிழல் போல ஆக

நிஜம் எங்கு தேடுவாய்

மனம் நீயே சொல்லு!...

மனம் நீயே சொல்லு!...


- முத்து துரை 




Wednesday, 27 September 2023

மகளுடன் என் பயணம்...

நீ தூங்கும் அழகை 
ரசித்த விழிகள்
எப்போ தூங்குவாய் ஏங்குகிறது...

ஐய்யோ!
காதல் தோல்வியே மேல்
உன்னை தூங்க வைப்பதை விட
எண்ணுகிறது என் எண்ணம்...

  
ஏதெதோ கதைகள் பேசி பேசி ஓய்கிறது
உன்னை கொஞ்சி கொஞ்சி 
களித்த இதழ்கள் தூங்கடி என்று ...

நேரம் செல்கிறது
அய்யோ! 
இரவின் கொடுமை விரிகிறது
உனக்கு தூக்கம் மட்டும் வரவில்லையே...

எப்போது பிஞ்சி கைகள் மலரும்
எப்போது உன் கால்கள் நடைபோடும்
எப்போது உன் கண்கள் துயில் கொள்ளும் 
எப்போது எப்போது என்று புலம்பும் மனம்...

தாய்மை தூய்மைதான் 
நான் தாலாட்டு பாடியதும் 
நீ தூங்கியதும்...
கதை சொல்லியதும் 
தூங்கினாள் பிறர் சொல்ல
நமக்கு மட்டும் தான் இப்படியா
இன்னும் கதச் சொல்லுங்க 
இன்னும் கதச் சொல்லுங்க 
இனிய குரல் மட்டும்...

எல்லா நேரமும் அவளின் பாடல்கள் தான் 
நினைவில் வருவதெல்லாம் 
உருளைக்கிழங்கு செல்லகுட்டி
என்று வளர்வாளோ
என் செல்ல மகள்...

- முத்து துரை 





Wednesday, 20 September 2023

கத கதையாம்!!!

கத கதையா

கத கதையா

காரணமாம்...

காரணத்த நான் சொல்லவா!

பிடிக்கலனு சொல்றதுக்கு 

பல காரணம்...

பிடிக்கிதுனு சொல்றதுக்கு 

ஒரு காரணமாம்....

கத கதையா

காரணங்கள் அடுகுத்தமா

காரியங்களோடு...

காரியங்களை அறியாமல் 

காரணங்களை நம்புதம்மா...

யார் மீதும் யார் மீதும் 

நம்பிக்கை இல்லையம்மா...

வேண்டாம் வேண்டாம் 

இந்த உறவுகளம்மா 


- முத்து துரை 


 


Thursday, 14 September 2023

கணவன்! மனைவி!

தோழனே தோழனே!!

ஆருயிர் தோழனே!

அன்பின் உருவமே

அருமை குருவே!

ஆச்சரியங்கள் தருபவனே

அதிசயம் நிறைந்தவனே

அப்பா என்றேன் 

அதட்டினாய்...

அண்ணன் என்றேன் 

அடைகாத்தாய்...

தோழன் என்றேன் - என்

தோல்விகளை நீ ஏந்தினாய்...

காதலன் என்றேன் 

கவிதைகள் தந்தாய்...

கணவன் என்றேன் 

கரம் பிடித்தாய் 

எல்லாமும் நான் என்றே!!

உன்னுள் நான் வர 

என்னுள் நீ வர

என்ன தவம் செய்தேனோ! 

என் ஆசை அழகா!


- முத்து துரை 


Tuesday, 12 September 2023

நோய்கள்

உன்னை நான் அழைக்கவில்லை

உன்னை நான் நெருங்கவுமில்லை

ஏன் என்னுள் வந்தாய்...


ஒவ்வொரு உறுப்புக்கும்

ஒவ்வொரு உறுப்பினர்களாம்

சிறந்த ஆலோசர்கர்களாம்...

யாரிடம் இருந்து வந்தாயோ?

யாரிடம் போவாயோ?

யாருக்கும் தெரியாது...

கை சுத்தம் முழு உடல் சுத்தம்

எல்லாம் சுத்தம் இருந்தும் 

எங்கிருந்து வருகிறாய்?


- முத்து துரை 


Wednesday, 6 September 2023

மகளின் கடிதம்

உன்  வருகைக்காக 
என் விழிகள் 
செல்லகுட்டி என்று
அள்ளிகொள்ளும் கைகள்!
எங்கே நீ என்று கேட்டுகொண்டே 
என் நாட்கள் விரிய...
உன் அன்பு 
எனக்கு மட்டும் 
சண்டையிடும் நான்!

உன் காதலியும் நானே!
உன் தோழியும் நானே!
உன் எதிரியும் நானே!
உன் நட்பும் நானே!
உன் தொல்லையும் நானே!
எல்லாம் நானே
உன் தோலின் வலிமை அறிந்தேன்
உன் கண்களின் ஆழம் அறிந்தேன்
உன் நேர்மையின் வீரம் அறிந்தேன் 
உன்னை அருகில் இருந்து அறிந்தேன்
உன்னை தேடும் மகள்
எப்போ வருவாய்
என் இனிய அப்பா!

- முத்து துரை 



Wednesday, 30 August 2023

வார்த்தைகள்!

கத்தியும் நீயே!

கைகுட்டையும் நீயே!

கண்ணீரும் நீயே - ஆனந்த 

கண்ணீரும் நீயே!!

வார்த்தையே உன்னை 

வதைக்க ஆள் இல்லை...

- முத்து துரை 

Monday, 28 August 2023

உள்ளம் உன்னோடு

உயிர் என நானிருந்தேன்

உறவென நான் நிமிர்ந்தேன்

உள்ளம் எல்லாம் திமிரினேன்

உவகை எல்லாம் தேடினேன்

உருளும் ஒரு வார்த்தை - உன் 

உதடில் உதிராதா ?

உறைந்து நின்றேன்!

உதிரம் பிளந்து 

உன் உருவம் வரைந்தேன்...

உருகும் உன் மனம் என்றேன்

உருகுலைந்தேன் நான் 

உதிர்ந்த சருகாய் நின்றேன் - என் 

 உசுரையாவது தந்துவிடு இப்படிக்கு

உன்னுள் கரைந்த என் உயிர்...


- முத்து துரை 




Thursday, 10 August 2023

நீ பள்ளிசென்றாய்!

வேண்டாம் வேண்டாம் என்றாய்

நான் விலகி விலகி சென்றேன்!

 நாளை என்றாய் 

இன்று ஒரு நாள் மட்டும் என்றேன்!

போகாதே போகாதே என்றாய்

போகவில்லை

பொய் சொல்லி நான் வந்தேன்!

நீ பள்ளி சென்றாய் கண்ணீருடன்

கண்கள் முழுதும் உன் முகத்துடன் 

 நான் நின்றேன் நீ வீடு வரும் வரை!


- முத்து துரை 

Friday, 3 March 2023

கண்ணீர்

 ஓடையில் நீந்துகிறது 

கருவிழிகள்.!


- முத்து துரை 

Saturday, 25 February 2023

புதினா

உள்ளுகுள் புத்துணர்ச்சி 

உதிர்ந்த பின்...

புதினா....


- முத்து துரை 

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...