Sunday, 5 April 2020

மேகங்களுக்கு பின்னால் இருக்கும் வானமாய்
உன் நினைவுக்கு பின்னால் இருக்கும்
காதல்!.

கதிரவனை காதலிக்கும்
நிலவாய் நீ நின்றாய்
நிலவை காதலிக்கும்
விண்மீன் கூட்டமாய் நான் வந்தேன்!.

பிரிவுடன் நீ நின்றாய்
புரிதலுடன் நான் வந்தேன்!.

சூறைக்காற்றில் நீ நின்றாய்
வருடும் தென்றலாய்
நான் வந்தேன்!.

ஒற்றை மலருக்காய்
ஓரம் நின்றாய்
சோலையுடன்
நான் வந்தேன்!.

வெறுப்புடன் நீ நின்றாய்
புன்னகையுடன் நான் வந்தேன்!.

- முத்து துரை
மழலை மொழி அழகு
தத்தி தத்தி நடக்கும் போது மனமும் தத்தி தத்தி தாவுகிறது...
சோர்வு என்று வந்தால்
மழலை அவள் சிரிப்பு
சோர்வும் சலிர்த்திட வைக்கிறது...
போதும் என்று கேட்டிடாத
ஒன்று
என்றும் மழலை சிரிப்பு...

-முத்து துரை
தமிழ் மொழி இணைக்கும்
தாய்மொழி அவனும் நானும்..
காதல் சொல்ல காதல் இருந்தும்.
கண்கள் கெஞ்சிடும் காதலை..
வார்த்தை தோற்கும் நேரம்
கைகள் பிணையும் நேரம்
காதல் வெளிப்படும் நேரம்
எல்லாம் காதலை சொல்லும்..
அவன் மட்டும் சொல்ல மறுக்கும் ஒன்று
அதை ஆசையுடன் எதிர்பார்க்கும் என் செவிகள்...
அலைகள் மோதும் அழகை
ரசிக்கும் அவன் மனம்.
இந்த பெண்ணின் அலைகளை உணர்ந்தும்
ரசித்தும் உள்ளுக்குள் மகிழும்...
காதல் என்ற உறவு
நம்மில்
காமத்தை தாண்டி வளர்கிறது...

-முத்து துரை
கண்கள் இரண்டும் சேர்ந்து வாழ..
இமைகள் இரண்டும் மின்னல் என மின்னிட...
உன் பார்வையில் நான்
என் பார்வையில் நீ..
கருவிழி நான்கும்
நமது பிம்பத்தை மாற்றிட...
உருளும் வட்டமென
கண்கள் உன்னை வட்டமிட..

சிவந்த உதடில்
சிரிப்பு மழை
உதடு விரிவில்
உள்ளம் உருளும்
தேன் கிண்ண வாய்கள்
இணைந்து சத்தமிட
உதடுகள் பேசிடும் இனிய மொழி முத்தம்...

தென்றல் புயலென மாறிடும்
கருமேகம் வெண்மேகமாய்
மாறிடும்.
கடல் அலைகள்
மணல்மேடாய் மாறிடும்..
என் மனமும்
ரணமாகிடும்
அவன் கோபத்தினால்...

-துரை முத்து
அங்கே மழை பொழிகிறது
இங்கே என்னுள் உன் நினைவுகள்...
மழைக்களில் நனைந்திடும் மேனியாய் நீயும் நானும்...
சில்லிடும் நாணங்கள்
சிலிர்த்திடும் மேகங்கள்...
உன்னை மேகமென நான் சுற்ற..
என்னை தூறல் என நீ அணைப்பாய்...
பாறை மீது விழும் மழைத்துளி
உன் மீது நான் விழும் நேரம்.
தேடிடும் உன்னை நான்...

-முத்து துரை
கவிதைகள் என்னை அழைக்க..
கவிதையை நான் அழைத்தேன்...
உன்னை தேடிடும் கண்களை..
என்னை நோக்கிட செய்தேன்...
மனம் எல்லாம் நீ  ...
குணம் எல்லாம் நீ...
கேட்ட கவிதைகள்
பார்த்த பார்வைகள்
எல்லாம் நீயே!..

-துரை முத்து
உதிரத்தை பூசி வந்தவள்...
உயிர்க்கு உயிராய் ஆனவள்...
வலியுடன் பிறந்தவள்...
வாய் நிறைய புன்னகை புரிபவள்...

-முத்து துரை
உன் கண்களில் விழ துடிக்கிறேன்
உன் காதோரம் மூச்சுக்காற்றை விட நினைக்கிறன்..
உன் இதழில் துயில் கொள்ள தவிக்கிறேன்...
உன் மார்பில்
என் கூந்தல் மயிலாட ஏங்குகிறேன்...
உன்னை எண்ணி எண்ணி கதைக்கிறேன்...
பேழை போல் மனம் முழுதும் காதல் கொண்டேன்...
உன் வர்த்தைக்கா காத்திருக்கிறேன்...

- முத்து துரை

என் மகள்

என் மார்போடு
உன்னை அணைக்கையில்
என் மார் துவாரங்கள் எல்லாம் விரிகிறது...

மகளே உன்னை கொஞ்சிடும் போது
மடி எல்லாம் நிறைகிறது...

உன் கண்ண சிரிப்பில்
என் கணம் எல்லாம் மறைக்கிறது....

உன் அழு குரலில்
மனம் எல்லாம் பதைக்கிறது...

பசியில் நீ கைகள் சுவைக்கும் போது
நவரசமும் என்னுள் அடங்கி போகிறது...

ஓடி வரும் கால்கள்
தூக்கிட துடிக்கும் கைகள்
பார்த்திட தூண்டும் கண்கள்
திரும்ப திரும்ப கேக்கும்...

- முத்து துரை

நீ

உன்னை மறுக்கவும் முடியவில்லை
அவளை மறக்கவும் முடியவில்லை
தவிக்கிறேன் நான்...

இடையினில் வந்தவள்
இமைகளில் இருக்க
கரம் பிடித்தவள்
காதலில் நான் இருக்க
சின்ன தேவதை
சிரிப்புகளில் - இதயம்
சிதறிபோக

நிஜங்களில் திழைக்கவா
இல்லை
நிழல்களில்
தவிக்கவா...

ஏக்கத்துடன் தொடரவா
இல்லை
அமைதியுடன் பயணிக்கவா....

ஆர்ப்பரிக்கும் மனமா
இல்லை
ஆசை கொள்ளும் மனமா...
எதை நான் தொடர!.

அன்புடன் அவள் நிற்க
ஆசையுடன் இவளை தேடி நான்...
இடையினில் தவழும் மழலை சிரிப்பு...

என் காதலில் அவள்
உன் காதலில் நான்...

- முத்து துரை

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...