Friday, 8 September 2017

கிறுக்கல்



மேக கூட்டங்கள் இடையில் 
மின்னிடும் மின்னலாய் 
கண்களை பறிக்கும் பாவை 
அவள் கண் ஜொலிப்பு.... 

நாத ஒலி கீத சுவரங்களும் 
நாட்டியமாடும் 
ஏழு சுவரம் மீதேறிய எட்டாம் சுவரமான 
என்னவள் கீதத்தில்...... 

பொய் மானாய் போக்கு காட்டும் 
கூந்தல் அலைகள் - அதில் 
சிக்காத கவினனும் இல்லை.... 

இளவரசி இடை தழுவியதால் 
இழைத்ததோ இல்லை 
இடை ஏறிய மீட்சியில் 
இழைத்ததோ?? 
இடை ஒட்டியாணம்..... 

குரல் வலைக்குள் சிக்கிய 
அவள் பெயர் 
உள்ளும் செல்லாமல் வெளியும் செல்லாமல் 
உதடோடு ஒட்டிக்கொண்டது..... 

பாவை அவள் முக பாவனைக்கு 
மூவண்ண மலரும் 
மலர்ந்து உதிரும்!!! 
மொட்டுகளும் மலர துடிக்கும்...... 

பறவைகள் கீச்சிடும் நாதம் 
பாவை அவள் கொள்ளும் 
கோபம்..... 

நீர் அடியில் தவித்திடும் 
சிறு புல்லை போல் தவிக்கிறது - அவளிடம் 
சொல்லாத என் கவிதை வரிகள்..... 

கானங்கள் பல கேட்டும் 
காதலிக்காத மனம் கூட அவளின் 
காதலுக்காக காத்துக்கிடக்கும்..... 

- மூ. முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...