என் நாக்கூட குழறுகிறது
அவள் நா அசைவில்
செவி சாய்ப்பதால்
ஒரு நிமிடம் கூட நீடிக்கா கோபம்
அவள் கண் இமையில்
என் உதடுகள் சிக்கியதால்
அவளின் பாத தரிசனம் செய்ய
பின் தொடர்வது மட்டும்
என் பாதங்களின் தொழில்....
ஓங்கிய கைகள் கூட
ஓசையின்றி அடங்குகிறது
அவள் கை வலையோசையில்.....
பிரிவு வறுத்தாலும்
முகம் பார்க்க மறப்பதில்லை
நிழல் படங்களில்....
அவள் கொண்ட முக பருவில்
முத்தங்கள் சிந்திட துடிக்கும்
என் நுனி உதடுகள்!...
சண்டைகள் பல இருந்தும்
சந்தங்களாய் சாய்ந்து
துயில் கொள்ள வேண்டும்
அவள் தோளில்...
கேட்க்கும் பாடல்களின் சுவரங்களில்
அவள் நினைவை மட்டும்
சுமக்கும் நினைவுகள்.....
என் இயல்பை
என் இயற்கையை மாற்றிய
என் அழகிய இம்சை விரோதியே!
என் காதலியே!!
-மூ.முத்துச்செல்வி
No comments:
Post a Comment