இதழ்களில் வழிந்தோடும்
கனி ரசம்
இரத்தின புன்னகை - அதில்
முத்துக் குளிக்க
காத்திருக்கும்
வரிசை.....
உறையூர் கண்டாங்கி
மேனி தாங்கி
உலாவும் வெள்ளை புறா....
காட்சிகளின் வண்ணங்களின்
பிரதிபலிப்பை வரைந்திடும்
மேகம் வரைந்த விழிகள்.....
பின்னல் போடும் மயில் தோகை
பின்னி நாணும் பூவின் மணம்
கூந்தல் பொழியும் இயற்கை மணம்....
செவித்தோடு செல்லும் பாதை
தொட்டு வீசும் காற்றின் கீதம்
அசைவில் அலையாடும் தென்றல்....
கை நிலவு கானம் இசைக்க
தாமரை இதழும் துளிர் விடும்
நீரில் தலை அசைத்து
வளைந்த கூட்டத்தின் இன்னிசையில்......
பாதம் தந்த பரவசத்தில்
தேகம் சிலிர்த்து வெளிவரும்
மெல்லிய புல்லும்....
நாணம் அருளும்
ஓவிய அகராதி
கிராம பெண்கள்.....
- மூ.முத்துச்செல்வி
No comments:
Post a Comment