Wednesday, 27 September 2017

முற்றுப்பெறா முதல் காதல்



என் காதல் வார்த்தையாய் 
அவள் செவியில் விழும் முன் 
கண்களின் ஓரம் அவள் சிந்திய ஈரம் 
வாடிய முல்லைப் போல் நின்றாள்..... 
புரியவில்லை பதில் ஏதும் கேட்காமல் 
பாதியில் வந்துவிட்டேன் வீடு தேடி 
மரணத்தின் வலி 
மறைத்தேன்..... 
சோகங்களின் நாட்டியம் சூழ 
அவளைப் பார்க்க மனமில்லை..... 
அவள் மனம் புரிந்ததால் 
விலகிவிட்டேன் விட்டுவிட்டேன்... 
அவளிடம் விட்டு வந்த 
என் பாதி காதலுடன்..... 

-மூ.முத்துச்செல்வி

வரம் தரும் பொழுது


நாத குழல் துவாரங்களில் 
வீசிடும் மெல்லிய காற்றின் இசை 
கூவும் குயிலின் இன்னிசை 
அதை கேட்டு ஆடுதம்மா 
மயிலின் தோகை.. 
மேகங்களுக்கு இடையில் 
வேடிக்கை பார்க்குது - என் 
காலை கதிரவன்.... 
சப்தங்களின் ஒலியில் 
துயில் கொண்டு கூவுதம்மா 
கொண்டைக் கோழியும்.... 
அணிலின் நாதமும் பின்னணியில் 
அலம்பிட மயங்கிய மரக்கிளை 
இசையுடன் அசைந்திட 
சின்ன குருவிகள் 
காதல் 
பொழிந்திட 
இனிய நாடகங்களுடன் 
பொழுது விடிகிறது..... 

- மூ.முத்துச்செல்வி

சொல்லாத முதல் காதல்



தேரோட்ட வீதியில் 
தொலைந்த 
திரு திரு கண்கள் - அவளிடம் 
தொலைந்த என் காதல்!! 

விடியல் பனியில் 
மங்கிய 
சூரிய விருச்சம் 
மங்கிய என் காதல் !! 

இடை மருங்கி 
நடை தளர்ந்த 
முதுமை என் காதல்!!! 

சூரிய நிழலில் 
மறைந்த 
சந்திரன் 
இருள் நீண்ட என் காதல்!! 

செங்கதிர் தேக கூந்தல் 
மணத்தில் - கூம்பிய 
இதழ் மலர்ந்த 
செந்தாமரை என் காதல்!! 

நந்தவனத் தோட்டத்தில் 
துள்ளி திரியா 
கருகிய பூக்கள் 
வாடிய என் காதல் !! 

துள்ளி திரியும் மீன்கள் 
சுவாசிக்கும் நீரின்றி 
தவிப்பது என் காதல்!! 

விண்ணை காண சென்ற 
விட்டில் மண்ணில் முட்டிய 
ஏமாந்த என் காதல் !! 

வனிதையிடம் 
சொல்லாத முதல் காதல் 
வருடங்கள் கடந்தாலும் 
என் மனதில் மட்டும் உள்ள 
என் ரகசிய காதல் 

-மூ.முத்துச்செல்வி

கிராமத்து பெண்



இதழ்களில் வழிந்தோடும் 
கனி ரசம் 
இரத்தின புன்னகை - அதில் 
முத்துக் குளிக்க 
காத்திருக்கும் 
வரிசை..... 

உறையூர் கண்டாங்கி 
மேனி தாங்கி 
உலாவும் வெள்ளை புறா.... 

காட்சிகளின் வண்ணங்களின் 
பிரதிபலிப்பை வரைந்திடும் 
மேகம் வரைந்த விழிகள்..... 

பின்னல் போடும் மயில் தோகை 
பின்னி நாணும் பூவின் மணம் 
கூந்தல் பொழியும் இயற்கை மணம்.... 

செவித்தோடு செல்லும் பாதை 
தொட்டு வீசும் காற்றின் கீதம் 
அசைவில் அலையாடும் தென்றல்.... 

கை நிலவு கானம் இசைக்க 
தாமரை இதழும் துளிர் விடும் 
நீரில் தலை அசைத்து 
வளைந்த கூட்டத்தின் இன்னிசையில்...... 

பாதம் தந்த பரவசத்தில் 
தேகம் சிலிர்த்து வெளிவரும் 
மெல்லிய புல்லும்.... 

நாணம் அருளும் 
ஓவிய அகராதி 
கிராம பெண்கள்..... 

- மூ.முத்துச்செல்வி

அவள் தந்த தனிமை



மழைத்துளியில் 
கரைந்திட்ட கண்ணீர்த்துளி 
அவள் தந்த சோகம்!!!..... 

மரகத மின்னல்கூட 
புலப்படவில்லை 
அவள் தந்த இருளால்!!!.... 

தொண்டையில் சிக்கிய முள்ளாய் 
உள்ளும் செல்லாமல் 
வெளியும் வராமல் 
அவள் தந்த தனிமை!!!.... 

பாய் மர ஓடம் 
காற்றின் அசைவை வட்டமிடுவதை போல் 
என் மனம் வட்டமிடும் 
அவள் தந்த நினைவில்!!!..... 

-மூ.முத்துச்செல்வி

Friday, 8 September 2017

கிறுக்கல்



மேக கூட்டங்கள் இடையில் 
மின்னிடும் மின்னலாய் 
கண்களை பறிக்கும் பாவை 
அவள் கண் ஜொலிப்பு.... 

நாத ஒலி கீத சுவரங்களும் 
நாட்டியமாடும் 
ஏழு சுவரம் மீதேறிய எட்டாம் சுவரமான 
என்னவள் கீதத்தில்...... 

பொய் மானாய் போக்கு காட்டும் 
கூந்தல் அலைகள் - அதில் 
சிக்காத கவினனும் இல்லை.... 

இளவரசி இடை தழுவியதால் 
இழைத்ததோ இல்லை 
இடை ஏறிய மீட்சியில் 
இழைத்ததோ?? 
இடை ஒட்டியாணம்..... 

குரல் வலைக்குள் சிக்கிய 
அவள் பெயர் 
உள்ளும் செல்லாமல் வெளியும் செல்லாமல் 
உதடோடு ஒட்டிக்கொண்டது..... 

பாவை அவள் முக பாவனைக்கு 
மூவண்ண மலரும் 
மலர்ந்து உதிரும்!!! 
மொட்டுகளும் மலர துடிக்கும்...... 

பறவைகள் கீச்சிடும் நாதம் 
பாவை அவள் கொள்ளும் 
கோபம்..... 

நீர் அடியில் தவித்திடும் 
சிறு புல்லை போல் தவிக்கிறது - அவளிடம் 
சொல்லாத என் கவிதை வரிகள்..... 

கானங்கள் பல கேட்டும் 
காதலிக்காத மனம் கூட அவளின் 
காதலுக்காக காத்துக்கிடக்கும்..... 

- மூ. முத்துச்செல்வி

Thursday, 7 September 2017

அழகிய விரோதி


என் நாக்கூட குழறுகிறது 
அவள் நா அசைவில் 
செவி சாய்ப்பதால் 

ஒரு நிமிடம் கூட நீடிக்கா கோபம் 
அவள் கண் இமையில் 
என் உதடுகள் சிக்கியதால் 

அவளின் பாத தரிசனம் செய்ய 
பின் தொடர்வது மட்டும் 
என் பாதங்களின் தொழில்.... 

ஓங்கிய கைகள் கூட 
ஓசையின்றி அடங்குகிறது 
அவள் கை வலையோசையில்..... 

பிரிவு வறுத்தாலும் 
முகம் பார்க்க மறப்பதில்லை 
நிழல் படங்களில்.... 

அவள் கொண்ட முக பருவில் 
முத்தங்கள் சிந்திட துடிக்கும் 
என் நுனி உதடுகள்!... 

சண்டைகள் பல இருந்தும் 
சந்தங்களாய் சாய்ந்து 
துயில் கொள்ள வேண்டும் 
அவள் தோளில்... 

கேட்க்கும் பாடல்களின் சுவரங்களில் 
அவள் நினைவை மட்டும் 
சுமக்கும் நினைவுகள்..... 

என் இயல்பை 
என் இயற்கையை மாற்றிய 
என் அழகிய இம்சை விரோதியே! 
என் காதலியே!! 

-மூ.முத்துச்செல்வி

காதல் கடிதம்


காதல் கடிதம்

காதலை நேசிக்கிறேன் ! 
காக்கை, குருவியை நேசிப்பதால்... 
காதலில் தத்தளிக்கிறேன் ! 
கண்ணதாசன், கல்கி வரிகளில் தத்தளிப்பதால்... 
காதலில் கரைகிறேன் ! 
இயற்க்கை அழகில் கரைந்ததால்.... 
காதலை வர்ணிக்கிறேன் ! 
மலைகளின் செறிவை வர்ணிப்பதால்... 
காதலை தெரிந்தேன் ! 
அனைத்தும் அழகாய் தெரிந்ததால்... 
காதலை சுமக்கிறேன் ! 
அழகிய நினைவுகளை சுமப்பதால்... 
காதலில் அழுகிறேன் ! 
வேதனைகள் போர்த்தி அழுவதால்.... 
காதலை சபிக்கிறேன் ! 
என் கண்ணீர் என்னை சபிப்பதால்... 
இறுதியில் !!! 
எல்லாவற்றையும் காதலிக்கிறேன் ! 
உன்னை காதலிப்பதால்... 

-மூ.முத்துச்செல்வி


சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...