Tuesday, 11 May 2021

இனிய செய்தி

 

இனிமை கலந்த மனம்
இயற்கையை நேசிக்கும் கண்கள்
இறைவா! இறைவா!
பூஜிக்கும் உதடுகள்
இனிய செய்தி இனிமை செய்தி
என்னவன் வருகை காத்திருந்து
எண்ணம்போல் கட்டி தழுவி சொல்லிட துடிக்குது மனது
அவனின் வருகை எதிர்பார்த்து
அவனிடம் தான் முதலில் சொல்ல வேண்டும்
அவனிடம் முத்தங்களை கோரவேண்டும்
அம்மாவின் அழைப்பு
அப்பாவின் கேள்விகள்
எல்லாத்துக்கும் மௌன பதில்
எங்கே என்னவன்
சொல்ல துடிக்குது இனிய சொற்கள்....
இனிய செய்தி
இனிப்புடன் கூறவா?
இல்லை
இதயத்துடன் பேசவா?
அவனின் ஆனந்தத்தை பார்க்க வேண்டும்
சீக்கிரம் வா கணவனே!

- முத்துதுரைசூர்யா


No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...