Saturday, 29 May 2021

அவளின் தனிமை

 அழகான இரவில்

அவள் மட்டும் தனிமையில்

கூட்டங்கள் பல கூடினாலும்

அவள் மட்டும் தனிமையில்

தனிமையில் கரைவதும்

பின் தனிமயிலே வளர்வதும்

அவளின் தனிமை என்றுமே அழகுதான்!

- முத்து துரை சூர்யா

Saturday, 22 May 2021

உவமை என்பதால் உருக்குகிறாயோ

 

நிலவென்பதால் கரைக்கிறாயோ
நிஜங்களில் மிளிர நினைத்தாய்
நினைவுகளில் மிளிர்கிறாய்

கடல் என்பதால் கரை மோதி மோதி
மன குமுறளை குறைகிறாயோ
மனமே இங்கு எதுவும் நிலையில்லை

மேகம் என்பதால் சுழல்கிறாயோ
இதயகூட்டில் எல்லாம் பொய்யே

- முத்து துரை சூர்யா


கனவு

கனவுகள் கண்களின் விருந்துகள்

கனவு களைய கூடாது சில வேளை

கனவு கலையாதா சில வேளை

நினைவுடன் கனவே மேல்

நிழலாய் இருந்தாலும்

நிஜமாக இருக்காதா ஏங்கும் மனம்

திரும்ப எப்போது கிடைக்கும் இந்த தருணம்

இன்ப கணவுகள்

வம்பு கனவுகள்

இம்சை கனவுகள்

பதட்ட கனவுகள்

லட்சிய கனவுகள்

பிரமாண்ட கனவுகள்

எத்துணை கனவுதான்

எத்துணை கற்பனை

எண்ணில் அடங்கா

என்னில் விளைந்த புதுமை


- முத்து துரை சூர்யா


அன்பு மகளே

 அன்னை பட்டம் தந்தாய்

அகிலமும் நீ ஆகினாய்...


என் இமைகள் இணைய மறந்தது

உன் இமைகளின் நடனத்தால்...


கைகள் கோலம் போடுகிறது

உன் கால்களின் நடனத்தால்


என்றும் நீ எனக்கு உயிரே!


- முத்து துரை சூர்யா


Sunday, 16 May 2021

போ நீ போ

 போய்விடு நீ 

போதும் வாட்டியது

போதும் கண்ணீர்

போதும் பயம்

அழகாய் தெரிந்ததும்

அதிசயமாய் நிகழ்த்தும்

பயத்தால் தூரம் போனது

பயம் பயம் 

மனம் பயத்தால் தைய்ரியம் இழந்தது

எங்களுக்கு கொடுத்த பாடம் 

என்றும் மாறுவது இல்லை

இத்துடன் போதும்

நீ போ! போய்விடு!


- முத்து துரை சூர்யா

Tuesday, 11 May 2021

இனிய செய்தி

 

இனிமை கலந்த மனம்
இயற்கையை நேசிக்கும் கண்கள்
இறைவா! இறைவா!
பூஜிக்கும் உதடுகள்
இனிய செய்தி இனிமை செய்தி
என்னவன் வருகை காத்திருந்து
எண்ணம்போல் கட்டி தழுவி சொல்லிட துடிக்குது மனது
அவனின் வருகை எதிர்பார்த்து
அவனிடம் தான் முதலில் சொல்ல வேண்டும்
அவனிடம் முத்தங்களை கோரவேண்டும்
அம்மாவின் அழைப்பு
அப்பாவின் கேள்விகள்
எல்லாத்துக்கும் மௌன பதில்
எங்கே என்னவன்
சொல்ல துடிக்குது இனிய சொற்கள்....
இனிய செய்தி
இனிப்புடன் கூறவா?
இல்லை
இதயத்துடன் பேசவா?
அவனின் ஆனந்தத்தை பார்க்க வேண்டும்
சீக்கிரம் வா கணவனே!

- முத்துதுரைசூர்யா


சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...