Wednesday, 27 May 2020

உள் மனம் உன்னை சுமக்க
உதிரம் தாய்ப்பால் சுரக்கிறது...

உச்சாணியில் நீ இருக்க
உலகம் வேறு இல்லை எனக்கு...

பரவசம் தரும் வண்ணகள் எல்லாம்
உன் கண்ணில் நான் உணர...

முகம் மலரும் மலரின் வாசம் எல்லாம்
உன் மூச்சிக்காற்றில் நான் அறிய...

நாணத்தில் இருக்கும் காலை சூரியனின் அழகை
உன் முகம் உணர்த்த...

வருடலில் தேகம் சிலிர்க்க
வசந்த காலமாய் நீ வந்தாய்...

- முத்து துரை சூர்யா

Sunday, 24 May 2020

மௌனமாய் நீ தூங்கயிலே
சாரல் மழையின் மேன்மை தெரிகிறது...

தூங்கும் நேரம் உதடுகள் சிரிக்கையிலே
மொட்டு மலர்ந்த நேரம் உணர்கிறது...

கால்கள் கோலம் போடுக்கையிலே
காந்தள் மனம் வீசி பறக்கிறது...

கைகள் கழகம் செய்கையிலே
வீரனின் கலை தெரிகிறது...

மொத்தத்தில் என் மடியில்
துயில் கொள்கையிலே
என் மொற்றமும் உன்னில் சரணடைகிறது....

- முத்து துரை சூர்யா👨‍👩‍👧
மார்போடு உன்னை அணைத்து
உச்சி முகந்து முத்தம் கொடுக்கையில் கண்ணம்மா
உள் குருதியும் முத்தமிட ஆசை கொள்கிறது...

உன் விரல்கள் என் விரல் பிடிக்கையில் கண்ணம்மா
நடைபழக தோன்றுகிறது...

- துரை முத்து சூரியா
தேனே அமுதே
முழுமதி முகமே
கரும்பின் தெளிவே
மானே மயிலே
அறிவின் அறிவே
அன்பின் அருவியே!
அழகின் மொட்டே!
தென்றல் பூவே
அலையின் குரும்பே
தித்திக்கும் அமுதே
அன்னையின் செல்லமே!

- துரை முத்து சூர்யா
உன் முகத்துடன் என் முகம் புதைத்தேன்
மூச்சி காற்று இடம்பெயர்ந்து
என்னுள் பால் மனம் வீசியது
இமை ரெண்டும் உரசையில்
என் விழி உன்னுள் மாறியது
கன்னத்தில் நீ மோதினாய்
பனியென மாறியது மனம்
கைகளை கோர்த்தாய்
காதலை உணர்ந்தேன்
நீயோ!
மழலை மொழியில்
தாலாட்டு பாடு என்றாய்...

- முத்து துரை சூர்யா
வட்ட நிலவே வளரும் பிறையே
வடிவில் வாமனமே
வளரும் மாருதமே
சினத்தின் வேலே
அமைதியின் துதியே
அறிவின் வீணையே
வளத்தின் தாமரையே

கருவின் உயிரே
உயிரின் உறவே
உறவின் மொழியே
மொழியின் அன்னையே!
தாய்மையை உணர்த்திய தாயே!

- துரை முத்து சூர்யா👨‍👩‍👧

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...