Tuesday, 31 December 2019

நீ நான்

நான் நீ என்று இருந்தோம்
இனி நாம் என்று ஆனோம்...

வருசம் ஓடியும்
முதல் நாள் தந்த காதல் மாறவில்லை...

பரவசம் இல்லா மனதில்
பரிசுத்தமாய் நிறைந்த காதல்..

என்றும் உன்னில் நான்
என்னில் நீ
நம்மில் நம் காதல்...

வாழ்த்துக்களுடன்
- முத்து துரை

புத்தாண்டு

கண்ணதாசன் வரிகளாய்
கம்பன் காவியமாய்
வள்ளுவன் நெறிகளாய்
அவ்வை மொழிகளாய்
பாரதியின் வீரமாய்
அன்னையின் பாசமாய்
தந்தையின் வழிகளாய்
குழந்தையின் மழலையாய்
இயற்கையின் கொடையாய்
வளங்களின் வாழ்த்துகளாய்
இறையின் இனிமையாய்
வளரடும் விரியடும்
இனிய புத்தாண்டு

-  முத்து துரை

Saturday, 28 December 2019

பிரிவில் வாடினேன்
நினைவில் தேடினேன்
தனிமையில் திரிந்தேன்
தரணியில் அழைந்தேன்
உலகம் மறந்தேன்
உறவை நினைத்தேன்
நிழலை தேடினேன்
நிலவை அடைந்தேன்
உன்னை நினைத்தேன்
என்னை மறந்தேன்...

- முத்து துரை


Wednesday, 13 November 2019

எனக்கு கொடுத்தாய்

கம்பன் படித்தேன்
கற்பனை உணர்ந்தேன்...

ஒளவையை படித்தேன்
ஒழுக்கம் வளர்த்தேன்...

வள்ளுவன் உணர்ந்தேன்
வாழ்க்கை அறிந்தேன்...

மூலர் அறிந்தேன்
மூலமும் தெரிந்தேன்...

நால்வர் அறிந்தேன்
நல்வழி நடந்தேன்...

அனைத்தும் அறிந்தேன்
அன்பனே உன் அன்பினால்...

எனக்கு கொடுத்தாய்
என்னை செதுக்கினாய்...

கணவனே காதலை கொடுத்தாய்
நான் என்னை கொடுத்தேன்...

- முத்து துரை

Friday, 4 October 2019

காதல்

பாலில் கலந்த தேன் போல்
தித்திப்புடன் காதலை சொன்னேன்...
நீரில் கலந்த தேனாய்
சுவையற்று போக சொன்னாய்...

மணம் வீசும் பல மலர்களை
தேடி உன் முன் வந்தேன்...
வாசனை இல்லா
காகித பூவாய் மாறிட சொன்னாய்...

கதிரவன் செல்லும் இடமெல்லாம்
தலை அசைக்கும் தாமரையை போல இருந்தேன்...
நீர்குமிழ் சுமந்த அல்லி இதழாய்
இருக்க சொன்னாய்....

பற்றுடன் உன் கரம் பிடித்தேன்
பற்று வேண்டாம் போ என்றாய்...
மனதில் காதல் இல்லாமலா
என் மீது பாசம் வைத்தாய்..
பற்று இல்லாமலா காதல் கொண்டாய்...
உன் காதல் நான் அறிவேன்
என் காதல் நீ அறிவாய்...
காதலுடன் நான்...

- முத்துதுரை

Thursday, 12 September 2019

பறவையென பறந்தேன்
பாற்கடல் அளந்தேன்
இன்று
அவன் கால் கடலில் -என்
அலை அமைதியடைகிறது....

போர்க்களம் போல இருந்த மனம்
உன்னால் உன் அன்பால்
அலைந்திடும் மேகங்களுக்கு பின்
அமைதியாய் நிற்கும் வானமானது...

தென்றலென வந்தாய்
இதயஙகளின் மெல்லிய வாசனையை
உணர செய்தாய்...

காதலனே!
காதோடு உரைத்து போ
உன் காதலை
காத்திருக்கிறது என் உயிர்...

- முத்து துரை

Monday, 3 June 2019

பசுமையுடன்


விவசாயம் விழ்கிறது 
தலைதூக்க வாரிர் 
என்று கூவுவதைவிட... 

மனம், பணம் இருப்பவர் 
விவசாயியை, விவசாயத்தை 
தத்து எடுக்கலாமே... 

விவசாயம் அழியாது 
விவசாயியும் அழியமாட்டார் 

அரசியல் செய்வது விடுத்து 
நிவாரணங்கள் தருகிறோம் 
தள்ளுபடி செய்கிறோம் 
என்று கூறாமல் 
விவசாயத்தையும, விவசாயத்தையும் தத்து எடுப்போம்! 
விவசாயம் வளரட்டும் பசுமையுடன்... 

- மூ.முத்துச்செல்வி

Wednesday, 13 February 2019

காதல் பயணம்

நிமிடங்கள் நகரும்
இவ்வாழ்வில்
என் நிமிடம் மட்டும்
தாளமிட்டு ராகம் இசைக்கிறது
அவன் என் அருகில் இருப்பதால்...

நாட்கள் செல்ல செல்ல
நாடகாட்டியும் காணாமல் போக
நான் மட்டும் நிற்கிறேன்
அவன் தந்த காதலுடன்...

நிலவை தேடும் மேகமாய்
அவனின் நினைவை தேடுகிறது
காதல் மனம்...

சந்திக்கும் நேரம் குறைவு!
சிந்திக்கும் நேரம் அதிகம்!
சில நேரங்களில்
சந்தித்தும் அவனை மட்டும்
சிந்திக்கிறது மனம்...

- மூ.முத்துச்செல்வி

Thursday, 7 February 2019

காதல் கணவன்

காதல் சொல்லும் கண்கள்
பார்த்திட துடிக்கிறதே!

உதடு பேசிய மொழிகளில்
முத்தங்கள் சிந்திய தருணங்களை

பார்வைகளில் காதல் விரித்தேன்
பார்க்காமல் நீ தந்த காதல்

பிரிவில் தெரியும் உண்மை காதல்
ஆம்
என் மனம் உன்னை மட்டும் தேடுகிறது...
எப்போது உன்னை சந்திப்பேன்...

காதல் மணவாளன்
காலமெல்லாம் இந்த காதலுடன்
நான்!

-மூ.முத்துச்செல்வி

நீ

ஊடல் ஊறும் வேளை
கூடல் தந்தாய்
கூடலில் நான் திளைத்திருக்க
மனகடலில் மகிழ்ச்சி தந்தாய்
என் எண்ணங்கள் முழுவதும்
நீ இருக்க
வண்ணங்கள் நிறைந்தது வாழ்க்கை
ஆதி நீ
அந்தமும் நீயே!
என் முடிவும் நீயே!
தோல் சாய்ந்திடும் நேரம்
தோல்விகள் இல்லை - உன்னுடன்
துயில் கொள்ளும் நேரம்
துன்பம் இல்லை.
தோழன் என நீ இருந்தால்
தோள்களின் வலிமையை நான் அறிவேன்
வழித்துணையாக நீ இருந்தால்
வழிகளின் சுவடுகள் நான் அறிவேன்
இயற்கையென நீ இருந்தால்
இன்பம் பல நான் அறிவேன்
உதயம் என நீ இருந்தால்
உருகும் உயிர் என நான் இருப்பேன்.
அணைத்துமாக நீ இருந்தால்
கணவனே உன் கரம் பற்றி
காலமெல்லாம் காதலிப்பேன்
உன் மடி சாய்ந்து..

- மூ.முத்துச்செல்வி


என் ஆசை

உன் மூச்சுக்காற்று
தென்றல் ஸ்பரிசத்தில்
வாழ்ந்திட ஆசை...

உன் கண்களில்
அழகிய பிம்பமாய்
இருந்திட ஆசை...

உன் நெற்றி
வியர்வையில் துளிகளாய்
விழுந்திட ஆசை...

உன் உதடின்
கொஞ்சிடும் முத்தங்களாய்
சிந்திட ஆசை...

உன் இதய துடிப்பில்
என் பெயர்
துடித்திட ஆசை...

உன் பாதங்கள்
படைக்கும் பாதைகள்
நானாக ஆசை...

- மூ.முத்துச்செல்வி


சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...