Saturday, 30 December 2017

புத்தாண்டு ஆசை









சிறகு விரித்தோடும் கிளிகள் போல் 
சிறகு விரித்து பறந்திட ஆசை! 

கதிரவன் கண் பட்டு நாணமுடன் 
விரியும் தாமரை இதழை தழுவிடும் 
பட்டாம்பூச்சியாய் காற்றில் பறந்திட ஆசை! 

மார்கழி பனியில் 
உடல் நடுங்கும் குளிரில் 
போர்வைக்குள் புதைந்திட ஆசை! 

சுதந்திர ஜன்னலில் 
காற்று வாங்கிட ஆசை! 
தனிமை மறந்திட ஆசை! 
பல வித பாடல்கள் 
பயின்றிட ஆசை!

தேனீ உழைப்பில் உள்ளம் 
தேனீக்களாய் மாறிட ஆசை! 

நிலவொளியில் 
நிலவின் மடியில் 
துயில் கொள்ள ஆசை! 

புதுமைகள் புரிந்திட ஆசை! 
தடைகள் கடந்திட ஆசை! 
தனி தமிழ் மடியில் 
தழைத்து முதிர்ச்சி அடைய ஆசை! 

- மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...